அட்டன் போடைஸ் பகுதியில் வெள்ளம் - 50 குடும்பங்கள் பாதிப்பு - ஆற்றை அகலப்படுத்த நடவடிக்கை



க.கிஷாந்தன்-
ட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா போடைஸ் பகுதியில் 17.04.2021 அன்று மாலை பெய்த கடும்மழை காரணமாக காசல்ரீ நீர்தேக்கத்திற்கு நீர் வழங்கும் மேற்படி தோட்டப்பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆறு பெருக்கெடுத்ததால் வெள்ளம் அப்பகுதியில் அமைந்துள்ள குடியிருப்புகளுக்கும், கடைகளுக்கும் உட்புகுந்ததால் 50 குடும்பங்களை சேர்ந்தவர்கள் பாதிக்கப்பட்டனர்.
எனினும் நீர் வடிந்து சென்றதன் பின் தங்களுடைய வீடுகளுக்கு சென்று விட்டனர்.
இப்பகுதியில் மழைக்காலங்களில் ஆற்றுநீர் பெருக்கெடுப்பதால் பல இடர்களை சந்தித்து வருவதாக இம்மக்கள் தெரிவிக்கின்றனர்.

அத்தோடு அட்டன் டயகம பிரதான வீதியின் போடைஸ் பகுதியிலான வீதி 17.04.2021 அன்று மாலை நீரில் மூழ்கியது. இதனால் பல மணி நேரம் அவ்வீதியினூடான போக்குவரத்து பாதிக்கப்பட்டிருந்தது.

எனினும், பாதிக்கப்பட்ட பிரதேசத்திற்கு விஜயத்தை 17.04.2021 அன்று இரவு மேற்கொண்ட இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமான் இந்நிலைமைகளை நேரடியாக பார்வையிட்டதுடன், மக்களின் கருத்துகளையும் கேட்டறிந்தார்.
அதனை தொடர்ந்து குறித்த ஆற்றினை அகலப்படுத்தி இப்பிரதேசத்திற்கு வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதாகவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :