விதிமுறைகளை மீறும் பஸ் சேவைகள் குறித்து பயணிகளுக்கு வந்த விசேட அறிவித்தல்



J.f.காமிலா பேகம்-
ஸ் சேவைகளில் ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப பயணிகள் உள்வாங்கப்படுகின்றார்களா என்பதை கண்டறிவதற்கு இன்று முதல் விசேட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் தெரிவித்துள்ளார்

பொதுப் போக்குவரத்து நடவடிக்கையில் ஈடுபடும் பஸ் மற்றும் ரயில்களில், ஆசன எண்ணிக்கைக்கு ஏற்ப மாத்திரமே பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என் சுகாதார அமைச்சு தெரிவித்திருந்த நிலையில், இன்று ஊடகங்களுக்கு கருத்துரைக்கையில் ராஜாங்க அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்

இதேவேளை குறித்த விதிமுறைகளை மீறி பயணிக்கும் பஸ் சேவைகள் தொடர்பில் பொதுமக்கள் முறைப்பாட்டினை பதிவு செய்யமுடியும் எனவும் தெரிவித்துள்ளார்

அத்துடன் இவ்வாறு அடையாளங் காணப்படுவோர் தொடர்பில் தனிமைப்படுத்தல் சட்டத்தின் பிரகாரம் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் போக்குவரத்து ராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :