இன்று(22) எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா;
அரசாங்கம் சமர்ப்பித்துள்ள கொழும்பு துறைமுக நகர ஆணைக்குழுச் சட்டமூலம் நாட்டிளுள்ள ஏனைய சட்டங்களைப் போல் அல்லாது முற்றிலும் வேறுபட்ட சட்டமாக கானப்படுகிறது. இது ஒரு கூட்டுத்தாபாணமாக(Cooperate Body)ஓர் கம்பனியாக அமைகிறது.முகாமைத்துவம் மற்றும் நிர்வாக பரிபாலனம் ஜனாதிபதியால் அவரின் தனிப்பட்ட அபிப்பிராய பிரகாரம் நியமிக்கப்படும் ஐந்து 5-7 அங்கத்தவர்களைக் கொண்டுள்ளது.இவர்கள் இந் நாட்டுப் பிரஜைகளாக இருக்கலாம்,வெளிநாட்டுப் பிரஜைகளாக இருக்கலாம்.பிராஜா உரிமை குறித்து தெளிவான விடயங்கள் குறிப்பிடப்படவில்ல.மத்திய வங்கி பினை முறை மேசடியில் ஈடுபட்ட பிரதான நபர் தான் ஒர் இலங்கைப் பிரஜையல்ல என்பதால் இன்று வரை அவர் கைது செய்யப்படாமல் சிங்கப்பூரில் இருப்பது சகரும் அறிந்ததே.இவ்வாறான நிலையே இங்கும் உருவாகலாம். இந் நிலப்பரப்பின் இடங்கள்,வியாபார அனுமதிப் பத்திரங்கள்,முதலீடுகள் உள்ளிட்ட சகல அதிகாரங்களும் ஜனாதிபதியால் நியமிக்கப்படும் மேற்குறிப்பிட்ட நபர்களிடமே இருக்கும்.
அடுத்த பிரதான விடயம் நிதி தொடர்பானது. ஆளுகையும் வேறாக்கப்ட்டு,கம்பனிகள் பதிவு சட்ட மூலங்களுக்கும் அப்பால் சென்றுள்ளதால் கணக்காய்வு விடயமும் இலங்கையில் இது வரையில் பின்பற்றப்பட்டு வரும் மரபுகளுக்கு அப்பால் சென்று தனிநபர் குழுவிடம் குவிந்துள்ளது.இது பாரிய அச்சுறுத்தலான விடயம்.பாராளுமன்றத்திற்கும் இலங்கை கணக்காய்வுத் திணைக்களத்திற்கும் பெறுப்பற்றதாக துறை முக நகரின் கணக்காய்வு விடயம் வேறாக்கப்ட்டுள்ளது. நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் தேசிய முதலீட்டு சபைக்குள் (BOI)உள்வாங்கி அந்த சட்ட மூலத்தின் பிரகாரம் அதை நிர்வகிக்க முற்பட்டோம்.முற்றிலும் தேசிய பெறிமுறைக்குள் உள்வாங்கியிருந்தோம்.
ஏலவே 2019 ஆம் ஆண்டு சட்டத்தில் அரசாங்க பதவி நிலை அங்கத்தவர்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும் என்று குறிப்பிட்டு அரசாங்க சார்பானதாக முன்னெடுத்தது.பின்னர் 2020 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்ஷவால் சமர்ப்பிக்கப்பட்ட சட்டத்தில் 2019 எங்களால் சமர்ப்பிக்கப்பட்டிருந்த அரச பதவி நிலை அங்கத்தவர்கள் ஐவருக்கும் மேலதிகமாக மேலும் இருவர் இணைக்ப்படடனர்.இதில் மத்திய சுற்றாடல் அதிகார சபை தலைவர் உட்பட மேலும் ஒருவர் உள்வாங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டிருந்தை இறுதியாக சமர்ப்பித்த சட்டத்தின் மூலம் மாற்றி தனியார் மயப்படுத்தியுள்ளனர். பெறுப்புக் கடமையற்ற பனிப்பாளர் சபையாக மாற்றியுள்ளனர்.
அடுத்த பிரதான விடயம் தான் துறை முக நகருக்கான ஆரம்ப முதலீட்டுத் தொகையான 2 பில்லியன் அமெரிக்க டெலர்களை நாங்கள் அரசாங்க தரப்பிலிருந்தே வழங்க முற்பட்டோம்.ஆனால் புதிய சட்ட மூலத்தில் ஆரம்ப முதலீட்டை தனியார் துறைக்கு வழங்கியுள்ளனர்.இந்த தனியார் உள்நாட்டில் உள்ளவையாக இருக்கலாம் வெளிநாட்டு தனியார் நிறுவனங்களாக இருக்கலாம்.இது குறித்த தெளிவான விடயங்கள் குறிப்பிடப்படவில்லை. இது நாட்டிற்கு பாரிய அச்சுறுத்தலான விடயம்.
நல்லாட்சியில் இலங்கை-சிங்கப்பூர் திறந்த பொருளாதார ஒப்பந்ததை நடைமுறைப்படுத்த முற்பட்ட போது நாட்டை வெளிநாட்டிற்கு விற்க முற்படுகின்றனர்,சிங்கப்பூர் பிரஜைகள் தொழில் நிமித்தம் இலங்கைக்கு வருகை தருவார்கள் என்றெல்லாம் கூறி தேசியவாதம் பேசி ஆட்சிகு வந்த இந்த அரசாங்கம் சீனாவிற்கு நிபந்தனையின்றி அடிபனிந்து அதன் அடைக்கு முறைக்கு உட்பட்டுளளனர்.
இலங்கையின் முன்னேற்றத்திற்கும் பெருளாதார அபிவிருத்திக்கும் கொழும்பு துறை முக நகரம் இன்றியமையாத்தாகும்,அது அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய மக்கள் சக்தி தெளிவாக உள்ளது.இதன் முன்னேற்றத்திற்கு எப்போதும் ஒத்துழைக்கும்.ஆனால் நிபந்தனையற்ற சட்டங்களுக்குட்பட்ட வெளிப்படத்தன்மையற்ற இலங்கையின் சுயாதீன இறைமைக்கு சவால் விடுக்கும் வழி முறைகளில் அமைந்த ஒழுங்குகளில் முன்னேற்ற ஐக்கிய மக்கள் சக்தி ஒரு போதும் இடமளிக்காது எனக் குறிப்பிட்டார்.

0 comments :
Post a Comment