கொழும்பு துறைமுக நகர முதலீடு - கட்டார், ஓமான், இந்தியா ஆகிய நாடுகளுடன் நிதி இராஜாங்க அமைச்சர் பேச்சுவார்த்தை



கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீட்டுகாக கட்டார் மற்றும் ஓமான் ஆகிய நாடுகளின் முதலீடுகளை பெற்றுக்கொள்வதற்காக மதிப்பீடுகளை மேற்கொள்வதாக நிதி இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால் தெரிவித்துள்ளார்.
இந்தியாவுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளது. அமைச்சர் மஹிந்த ராஜபக்ஷவின் விசேட பிரதிநிதி என்ற ரீதியில் சமீபத்தில் ஓமான் மற்றும் கட்டாருக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது இந்த விடயம் தொடர்பாக இரு நாட்டு நிர்வாக அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இலங்கைக்கு விஜயம் செய்து முதலீடு தொடர்பாக கண்டறியுமாறு இந்த குழுவினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக இந்தியாவுக்கு செல்லவிருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :