சற்றுமுன்னர் வரை 5 பேர் கொரோனாவுக்கு பலி!



லங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 5 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.
அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 634 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, மொரடுவை பிரதேசத்தை சேர்ந்த 80 வயதுடைய ஆண் ஒருவரும், கண்டி பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஆண் ஒருவரும், பேலியகொடை பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய ஆண் ஒருவரும், கொட்டமுல்லை பிரதேசத்தை சேர்ந்த 76 வயதுடைய ஆண் ஒருவரும் மற்றும் நாரஹேன்பிட பிரதேசத்தை சேர்ந்த 77 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதேவேளை, இன்றைய தினம் நாட்டில் 657 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய இலங்கையில் 98,722 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 93,884 ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :