கல்குடா தொகுதி சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் சிகையலங்கார தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (23) இடம்பெற்றது.
வாழைச்சேனை – மாவடிச்சேனை ரவ்லதுல் அத்பால் பாலர் பாடசாலை மண்டபத்தில் சங்கத்தின் தலைவர் ஏ.ஆர்.அஸ்பீர் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இந்நிகழ்வில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல். நெளபர், கிழக்கு மாகாண நுகர்வோர் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர் ஆர்.எப்.அன்வர் சாதாத், பலநோக்கு கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர் எம்.எஸ்.எம்.ஹாதி உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டு அடையாள அட்டைகளை வழங்கி வைத்தனர்.
இந்நிகழ்வில் கல்குடா தொகுதி சிகையலங்கார தொழிலாளர் கூட்டுறவுச் சங்கத்தின் ஏற்பாட்டில் விசேட நோன்பு திறக்கும் நிகழ்வொன்றும் ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment