சுகாதார அமைச்சின் புதிய கொரோனா விதிகள்:வீட்டிலிருந்து வெளியே இருவருக்கு மட்டும் வரலாம்!



J.f.காமிலா பேகம்-
செயலமர்வுகள், கூட்டங்கள் மற்றும் மாநாடுகளை நடத்த , மண்டபத்தின் ஆசன எண்ணிக்கையில் 50 வீதமே பயன்படுத்த வேண்டும் எனவும், 50 பேருக்கு மேற்படாத வகையில் அவற்றை மேற்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், சிகை அலங்கார நிலையம், அழகுக் கலை நிலையங்கள், பேக்கரி நிறுவனங்கள், திறந்த வர்த்தக நிலையங்கள் மற்றும் சில்லறை வியாபார நிறுவனங்களில், 50 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும், முன்பள்ளிகள் மற்றும் பாடசாலைகளில், 50 வீதம் மாத்திரம் அனுமதி வழங்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன், மேலதிக வகுப்புக்களை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதோடு, பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருமண நிகழ்வுகளுக்கு 150 பேருக்கு மாத்திரமே அழைப்பு விடுக்க முடியும் எனவும், திருமண மண்டபங்களில் 50 வீதமானவர்களுக்கே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், உள்ளக மற்றும் வெளியிடங்களில் நிகழ்வுகள் மற்றும் மாநாடுகளை நடத்தவும், பொது இடங்களில் ஒன்றுகூடவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், மதஸ்தலங்களில் உரிய சுகாதார வழிகாட்டல்களை பின்பற்றி, பரப்பளவில் 50 வீதமானவர்களுக்கு மாத்திரமே அனுமதி வழங்கப்பட வேண்டும் எனவம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், திரையரங்களில் 25 வீதமானவர்களை மாத்திரமே அனுமதிக்க முடியும் எனவும், சிறுவர் பூங்காக்கள் மற்றும் கரையோர களியாட்ட கூடங்கள் என்பன மூடப்பட்டிருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடற்கரையோரங்களில் நடமாடுவதற்கு மாத்திரமே முடியும் எனவும், அவ்வாறான இடங்களில் ஒன்று கூட முடியாது எனவும் சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :