கொரோனா என்பது பாரிய அச்சுறுத்தலான நோய் என்றே உலக நாடுகள் காட்டி வருகின்றன. அந்த வகையில் நமது நாட்டு அரசாங்கம் கொரோனா பரவலை எந்த வகையில் தடுக்க முடியுமோ அந்த வகையில் தடுக்க அர்ப்பணம் செய்து வருகிறது. நமது நாடு நீரால் சூழப்பட்டு நாடு என்பதால் கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்தால் நீர் மூலம் தொற்று ஏற்படலாம் என பெரும்பான்மை இன மக்கள் அச்சப்பட்டார்கள் என்ற நியாயத்தையும் நாம் புரிந்து கொண்டோம். ஆனால் பல ஆய்வுகளுக்கு பின் அவ்வாறு பரவாது என்பது இப்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
கொரோனா ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரசு அனுமதித்த நல்ல விடயத்தை தொடர்ந்து எடுத்த உடனே பல ஊர்களிலும் அடக்கம் செய்ய அனுமதிப்பது என்பது அரசுக்கும் பிரச்சினையை உண்டாக்கும் என்ற நியாயத்தை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
கொரோனாவால் மரணிப்போரை மனிதர்கள் அதிகம் வாழாத இரணதீவு என்ற தீவை அரசு தேர்ந்தெடுத்ததில் எந்தத் தவறும் இல்லை. முதலில் அங்கு கொவிட் சடலங்களை அடக்கம் செய்ய விட்டிருக்க வேண்டும். அவ்வாறு அனுமதித்திருந்தா அடக்கம் செய்வதால் எந்த பிரச்சினையும் இல்லை என்பதும் இந்நாட்டு மனிதர்களின் மனித நேயத்தையும் நிரூபித்திருக்கும்.
ஆனால் ஜனாஸாவை வைத்து அரசியல் செய்யும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இனவாதத்தை உள்ளத்தில் நிரப்பிக்கொண்டுள்ள சில தமிழர்களும் தமிழ் கிறிஸ்தவர்களும் இது தமிழ், முஸ்லிம் உறவை சிதைக்கும் என்ற ரீதியில் கருத்து வெளியிட்டமை தவறாகும்.
அந்தளவுக்கு மிக பலவீனமானதாக தமிழ், முஸ்லிம் உறவு உள்ளதா என கேட்கிறோம்.
அப்படியாயின் இரணதீவை சேர்ந்த ஒரு கிறிஸ்தவ குடிமகன் கொரோனாவால் மரணித்தால் அவரையும் அடக்கம் செய்ய இடமளிக்க முடியாத நிலை வரும் என்பதுடன் கொவிட் சடலத்தின் மூலம் கொரோனா நீரினால் பரவும் என்பதை இவர்கள் ஏற்றுக்கொண்டதாக முடியும் என்பதை ஏன் இவர்கள் சிந்திக்கவில்லை?
ஆகவே இது விடயத்தை அரசியலாகவும் இனவாதமாகவும் யாரும் பார்ப்பதை தவிர்த்து அரசு ஜனாஸாக்களை அடக்கம் செய்ய ஒத்துழைக்க வேண்டும்.
அத்துடன் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதிகளில் சுகாதார நடைமுறைகளைப்பின் பற்றி கொவிட் ஜனாஸாக்களை அடக்கம் செய்ய அரச சுகாதார துறை அனுமதிக்கும் என்ற நம்பிக்கை உலமா கட்சிக்கு இன்னமும் உள்ளது.
முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி.
0 comments :
Post a Comment