கொவிட் நோயினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு ஓட்டமாவடியில் காணியை அதிகாரிகள் பார்வையிட்டனர்



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
கொவிட் நோயினால் மரணிக்கும் முஸ்லிம் ஜனாஸாக்களை அடக்கம் செய்வதற்கு சுகாதார விதிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்யலாம் என்று அரசாங்கத்தினால் வர்த்தமானி அறிவித்தல் வெளியானதைத் தொடர்ந்து கொவிட் நோயினால் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்வதற்கான காணியொன்று ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் காகித நகர் கிராம சேவகர் பிரிவில் மஜ்மா நகரில் அடையாளம் காணப்பட்டுள்ளதைத் தொடர்ந்து நேற்று வியாழக்கிழமை அதிகாரிகள் அக்காணியை பார்வையிட்டனர்.
ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வி.தவராஜா, மட்டக்களப்பு மாவட்ட கொவிட் பொறுப்பாளர் பிரிகேடியர் பிரதீப் கமகே, ஓட்டமாவடி பள்ளிவாசல் நிர்வாகத்தினர், காத்தான்குடி மற்றும் ஏறாவூர் பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவன சம்மேளன பிரதிநிதிகள், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக அதிகாரிகள், கல்குடா ஜனாஸா நலன்புரி சங்க பிரதிநிதிகள்;, பிரதேச முக்கியஸ்தர்கள் சென்று இடத்தினை பார்வையிட்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :