சுக்ரா முனவ்வரை சந்தித்த 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில்



னியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய 'இலட்சாதிபதி' ரியாலிட்டி நிகழ்ச்சியில் தனது கல்வித் திறமையால் ஓரிரவில் இலட்சாதிபதியாகி புகழின் உச்சத்திற்குச் சென்ற 17 வயது பாடசாலை மாணவி சுக்ரா முனவ்வரை, ஏ.ஜே.எம். முஸம்மில் பவுண்டேஷன் 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் நேரில் சென்று சந்தித்து வாழ்த்துக்களைத் தெரிவித்ததுடன், பரிசுப்பொதிகளையும் வழங்கிவைத்தார்.

அதேவேளைத் தனவந்தர்களின் உதவியுடன் சுக்ரா முனவ்வருக்காக நிர்மாணிக்கப்படவுள்ள புதிய வீட்டுக்குத் தேவையான வீடு உபகரணங்களும் பெரோஸா முஸம்மில் அம்மையாரினால் வழங்கி வைக்கப்பட்டது.

மேலும் 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் தலைவி பெரோஸா முஸம்மில் அம்மையாரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கையின் முதல்தர வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் அறக்கட்டளை அமைப்பான 'தம்மிக்க பெரேரா பவுண்டேஷன்' இனால் மாணவி சுக்ரா முனவ்வர் கல்விபயிலும் காலி சுதர்மா கல்லூரியில் நிர்மாணிக்கப்படவுள்ள 'Digital Classroom' தொடர்பிலான கடிதமும் பெரோஸா முஸம்மில் அம்மையாரினால் காலி சுதர்மா கல்லூரியின் அதிபர் சரத் லியனகே அவர்களிடம் வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் முஸ்லிம் பிரிவின் தேசிய ஒருங்கிணைப்பாளர் உவைஸ் ஹாஜி அவர்களும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனாவின் காலி மாவட்ட முஸ்லிம் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ராஸிக் ஹாஜியார் அவர்களும், 'காந்தா சவிய' பெண்கள் அமைப்பின் செயலாளர் இஷாரா பிரியதர்சினி மற்றும் மாணவி சுக்ரா முனவ்வரின் தயார் காமிலா முனவ்வார் ஆகியோர் கலந்துகொண்டனர்.


எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :