ஓட்டமாவடி வைத்திய அதிகாரி அலுவலகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை



எஸ்.எம்.எம்.முர்ஷித்-
ட்டக்களப்பு மாவட்டத்தில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் மாவட்டத்திலுள்ள அரச திணைக்களங்களை சுத்தம் செய்யும் வேலைத்திட்டம் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவில் டெங்கு தாக்கம் அதிகரித்து காணப்படும் நிலையில் ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தை சுத்தம் செய்யும் நடவடிக்கை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் தலைமையில் நடைபெற்றது.

ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில்; கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் டிசம்பர் 31ம் திகதி வரை டெங்கு நுளம்பு பெருகுவதற்கு வசதியாக இடங்களை சுத்தம் இல்லாமல் வைத்திருந்த 626 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் அவை சீர்செய்யப்பட்டுள்ளதுடன், இவ்வருடம் 149 பேருக்கு எதிராக சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அத்தோடு கடந்த 2020ம் ஆண்டு ஒக்டோபர் முதலாம் திகதி தொடக்கம் 2021ம் ஆண்டு மார்ச் முதலாம் திகதி வரை 258 நபர்களுக்கு எதிராக பொலிஸ் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் மேலும் தெரிவித்தார்.

நிகழ்வில் மேற்பார்வை பொது சுகாதார பரிசோதகர் ஏ.எல்.நௌபர், பொது சுகாதார பரிசோதகர்கள், அதிகாரி அலுவலக உத்தியோகத்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :