தடுப்பூசி பெற்ற பெண் தாதி உயிரிழப்பு-கொழும்பில் பரபரப்பு!



J.f.காமிலா பேகம்-
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பணிபுரிந்த பெண் தாதி தடுப்பூசியொன்றை பெற்றுக்கொண்டதன் பின் உயிரிழந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

கம்பஹா – அம்பன்பொல பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய திருமணமாகிய பெண் தாதியரே இவ்வாறு மர்மமான முறையில் உயிரிழந்திருப்பதாக மருதானை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் தாதி, அதே வைத்தியசாலையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருடன் தகாத உறவு கொண்டிருந்ததாகவும், ஆண் மருத்துவரால் அனுப்பப்பட்ட குறுஞ்செய்திகளை தாதியின் கணவர் கண்டதால் இருவருக்கும் இடையே நீண்டநாள் பிரச்சினைகள் ஏற்பட்டிருந்ததாகவும் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில்தான் நேற்று முன்தினம் பெண் தாதியர், வைத்தியசாலையின் பணியறையில் வைத்து தடுப்பூசி ஒன்றை ஏற்றிக் கொண்ட நிலையில் சொற்ப நேரத்தில் மயங்கி விழுந்துள்ளார்.

தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்ட போதிலும் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :