கல்முனை காணிப்திவகத்தில் உறுதிகள் நீண்ட காலதாமதம்! பொதுமக்கள் விசனம்!


எம்.எம்.நிலாம்டீன்-
ல்முனை காணிப்திவகத்தில் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் முதல் பதிவுக்காக சமர்ப்பிக்கபட்ட உறுதிகள் இன்னும் பதிவு செய்யப்படாமல் 6 மாதங்கள் கடந்தும் கிடப்பில் கிடப்பதாக அறியப்படுகின்றன!

தங்கள் உறுதிகள் பதிவு செய்யப்பட்டிருக்கும் என்ற நிலையில் உறுதிகளைப் பெற்றுகொள்வதற்காக திருக்கோவில் முதல் பெரிய நீலாவணை வரையுமான நோத்தாருசுகள் மற்றும் பொதுமக்கள் கல்முனை காணிப்பதிவகத்தில் ஏறி இறங்கி வருகின்றார்கள்!

கல்முனை காணிப்பதிவகத்தில் ஏறி இறங்கி வரும் பொது மக்களுக்கு சாக்குப்போக்குச் சொல்லி கொரோனா என்ற காரணத்தை சொல்லி பொது மக்களை ஏமாற்றி வருவதாக பொது மக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றார்கள்

இதேநேரம் கல்முனை காணிப்பதிவகத்தில் இரண்டு முஸ்லிம் மேலதிக பதிவாளர்கள் உள்ளார்கள்.கடந்த 8 வருடங்களைக் கடந்தும் எவ்விதமான இடமாற்றமுமின்றி அவர்கள் உள்ள நிலையில் ஒரு தமிழ் மேலதிக பதிவாளர் நியமிக்கப்பட வேண்டிய அவசியத்தை நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் மற்றும் கலையரசன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்து அவர்கள் மூலமாக அமைச்சர் சமல் ராஜபக்ச ஊடாக பரிகாரம் கிடைக்கும் வகையில் ஒரு அணி செயல்பட்டு வருவதாக அறியப்படுகின்றன.

கடந்த வருடம் ஓய்வு பெற்றுச் சென்றுள்ள . கல்முனை காணிப்பதிவகத்தில் மேலதிக பதிவாளர் ஜமால் முகம்மத் மற்றும் கே.சிவதர்சன் ஆகியோர்கள் காலத்தில் ஒரு போதும் இப்படியான கால தாமதம் இருந்ததில்லை என்று சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர் தெரிவித்தார்

இதேவேளை கல்முனை காணிப்பதிவகத்தில் அதிகளவு ஆளணி உள்ள நிலையில் உறுதிகள் மற்றும் ஆவணங்கள் மேலதிகப் பதிவாளர்களின் கையொப்பமிடுவதற்க்காக ஆயிரக்கணக்கான உறுதிகள் மற்றும் ஆவணங்கள் தேங்கிக் கிடக்கின்றதாம். சாதரணமாக பதிவுக்ககாக சர்ப்பிக்கப்படும் உறுதிகள் 2 மாதங்கள் கடந்த நிலையிலும் பதிவு செய்யப்படாமல் கிடப்பில் கிடக்கின்றதாம்.

ஆனால் அம்பாறை காணிப்பதிவகத்தில் பதிவுக்காக சமர்பிக்காப்டும் உறுதிகள் 2 வாரங்களின் பின்னர் வழங்கப்பட்டு வருகின்றன. அம்பாறை காணிப்பதிவகத்தில் ஒரேயொரு மேலதிக பதிவாளராக சிங்கள அதிகாரி ஒருவரே உள்ளார்.

ஆனாலும் கல்முனை காணிப்பதிவகத்தில்கடமையாற்றும் ஒரு அதிகாரி தனக்கு வேண்டப் பட்டவர்களின் உறுதிகள் மற்றும் ஆவணங்களை துரிதமாக வழங்கி வருவதாக அறியப்படுகின்றன.

உறுதிகள் மற்றும் ஆவணங்களில் கையொப்பமிடுவதற்காக இரண்டும் முஸ்லிம் மேலதிகப் பதிவாளர்கள் உள்ள நிலையில் மற்றும் போதுமான ஆளணியும் உள்ள நிலையில் இந்த தொடர் கல தாமதம் குறித்து ஜனாதிபதி மற்றும் பொது நிர்வாக அமைச்சு பதிவாளர் நாயகம் பொது நிர்வாக அமைச்சின் செயலரும் பாதுகாப்பு செயலருமான களம் குணவர்தன ஆயியோருக்கு மகஜர் மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக அறிய வருகின்றன..

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :