புதிய அலை கலை வட்டத்தின் நலஉதயம் பிரிவு மீளுருவாக்கம்: புதிய நிர்வாக சபை தெரிவு




புதிய அலை கலை வட்டத்தின் சமூக நலச் சேவைப் பிரிவாக இயங்கி வரும் “நலஉதயம்” அமைப்பு, கடந்த ஞாயிற்றுக்கிழமை (22.02.2026) மீளுருவாக்கம் செய்யப்பட்டது. இதனை முன்னிட்டு நடைபெற்ற ஆரம்பக் கூட்டம், அமைப்பின் நிறுவனர் ராதாமேத்தா அவர்களின் தலைமையில் சிறப்பாக நடைபெற்றது.

இக்கூட்டத்தின் போது, அமைப்பின் எதிர்கால செயல்திட்டங்கள், சமூக நலத் திட்டங்களை விரிவுபடுத்தும் நடவடிக்கைகள், பெண்கள் மற்றும் பின்தங்கிய சமூகப் பிரிவினரின் முன்னேற்றத்திற்கான செயற்பாடுகள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்பட்டது. மேலும், சமூக நலச் சேவைகளை மேலும் பலப்படுத்தும் நோக்கில், புதிய நிர்வாக சபை ஒருமனதாகத் தெரிவு செய்யப்பட்டது.

அதன்படி, தலைவியாக திருமதி எம். ஜெயனிகவிதா அவர்களும், உப தலைவிகளாக திருமதி மா. சாந்தி, திருமதி செ. புனிதமலர் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர். செயலாளராக திருமதி எஸ். தனலக்ஷ்மி, உப செயலாளராக திருமதி ரா. புஸ்பலதா, பொருளாளராக திரு ஞா. சுபப்பிரியன் ஆகியோர் பொறுப்பேற்றனர். இதனுடன், அமைப்பின் செயற்பாடுகளைச் சிறப்பாக முன்னெடுக்க கமிட்டி உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

புதிய நிர்வாக சபையின் கீழ், சமூக நலச் சேவைகளை கிராம மட்டம் முதல் பிரதேச அளவிற்கு விரிவுபடுத்துவது, பெண்கள் மேம்பாடு, மாணவர்களுக்கான கல்வி உதவித் திட்டங்கள், முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் திட்டங்கள், சுகாதார விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் போன்ற பல்வேறு சமூக சேவைத் திட்டங்களை நடைமுறைப்படுத்த தீர்மானிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டதுடன், அமைப்பின் எதிர்கால பயணம் சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களை உருவாக்கும் வகையில் அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் வெளிப்படுத்தப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :