இளைஞர்களின் மற்றுமொரு நீண்ட கால தேவையாக இருந்து வந்த நிந்தவூர் மினா விளையாட்டு மைதானத்தின் அபிவிருத்தி மற்றும் புனர்நிர்மாணம் தொடர்பாக,பிரதேச இளைஞர்களால் எமது ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன நிந்தவூர் அமைப்பாளரும், திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுவின் இணைப்பாளரும், நிந்தவூர் அபிவிருத்தி-ஒருங்கிணைப்பாளருமாகிய "தேசகீர்த்தி"AL.Meerasahibo-JP அவர்களின் கவனத்துக்கு கொண்டு வந்ததற்கமைவாக,
திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும், கௌரவ பாராளுமன்ற உறுப்பினருமாகிய WD Weerasinghe MP அவர்களின் வேண்டுகோளுக்கமைவாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சினால் 4 மில்லியன் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
அத்தோடு இதன் முதற்கட்டமாக இம்மைதானத்தினது உள்ளகக் கட்டமைப்பு மற்றும் மதிப்பீட்டு அறிக்கையினை உடன் சமர்ப்பிக்குமாறு நிந்தவூர் பிரதேச செயலாளருக்கு திகாமடுல்ல மாவட்ட அபிவிருத்திக் குழுத்தலைவர் அவர்கள் பணிப்புரை வழங்கியுள்ளார்கள்.
0 comments :
Post a Comment