மட்டக்களப்பு - வாழைச்சேனை பகுதியிலிருந்து ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்களின் வலைகள் ஆழ்கடலில் வைத்துத் திருடப்பட்டு வருவதாக பாதிக்கப்பட்ட மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
தாம் மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்று வலைகளை வைத்து விட்டு வேறு திசையில் நிற்கும் போது, சிறிய படகில் வருவோர் தங்களின் வலைகளை அறுத்துச் செல்வதாக மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறான திருட்டு சம்பவங்கள் சுமார் 3 மாதங்களாக இடம்பெறுவதாகவும், இத்திருட்டைத் தடுக்க தாம் முயற்சிகளை மேற்கொள்ளும் போதும், படகில் வருவோர் தப்பிச் செல்வதாகவும் மீனவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
கடற்றொழில் வாழ்வாதாரத்தை நம்பி வாழும் எங்களது பெருமதியான வலைகளை அறுத்துச் செல்வதால் தாம் பெரும் நஷ்டத்தை எதிர்நோக்கி வருகிறோம் எனவும் மீனவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
இது தொடர்பில் தாம் மீனவ சங்கத்திடம் முறைப்பாடு செய்துள்ளதாகவும், இவ்வாறான செயற்பாடுகள் தொடராமல் சுதந்திரமாக தொழில் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட மீனவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
0 comments :
Post a Comment