"சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளித் தலைவரின் மறைவு கவலை தருகிறது" - மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட்!


ஊடகப்பிரிவு-

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜூம்ஆ பெரிய பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை தலைவரும் ஓய்வுபெற்ற அதிபருமான வை.எம்.ஹனீபா அவர்களின் மறைவு கவலை தருவதாக மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:

"ஆசிரியர் பணியில் இருந்த காலத்திலும், பொது வாழ்வில் அதீத ஈடுபாடு காட்டி, அந்தப் பிரதேச மக்களின் நல்வாழ்வுக்காக உழைத்தவர். சமூக சேவையில் நாட்டம் காட்டியது மட்டுமின்றி, சாய்ந்தமருது - மாளிகைக்காடு பெரிய பள்ளிவாசல் நிர்வாகத்தை பொறுப்பேற்று, அதனை நன்முறையில் வழிநடத்திய பெருமகன்.

ஆசிரியர் பணியிலும் பொது வாழ்விலும் நேர்மையையும் கண்ணியத்தையும் கடைப்பிடித்ததுடன், முஸ்லிம் சமூகத்தின் முன்மாதிரியான நம்பிக்கையாளர் சபைத் தலைவராக செயற்பட்டவர். அன்னாரின் இழப்பு சாய்ந்தமருது மக்களுக்கு மட்டுமின்றி, அம்பாறை முஸ்லிம் பிரதேச மக்களுக்கும் பெரும் இடைவெளியை ஏற்படுத்தியுள்ளது.

அன்னாரை அல்லாஹ் பொருந்திக்கொண்டு, நல்லடியார் கூட்டத்தில் சேர்த்திடவும், ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் உயரிய சுவர்க்கத்தை வழங்கிடவும் பிரார்த்திக்கின்றேன்.

அத்துடன், அவரது மகன் எம்.எச்.எம். நௌபர் உட்பட அன்னாரின் குடும்பத்தாருக்கு அவரது இழப்பை தாங்கிக்கொள்ளும் சக்தியை இறைவன் வழங்க வேண்டுமெனவும் பிரார்த்திக்கின்றேன்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :