எப்.முபாரக் -
கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவில் பத்து பேருக்கு கொவிட்- 19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளமை காரணமாக கிழக்கு மாகாண கல்வி திணைக்கள நிருவாக பிரிவு தற்காலிக மூடப்பட்டுள்ளதாக மாகாணக் கல்விப்
பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் இன்று(17) தெரிவித்தார்.
கடந்த 10 ம்திகதி கிழக்கு மாகாண கல்வி
திணைக்கள உத்தியோகத்தர் ஒருவர்
கொரோனா தொற்றுக்கு உள்ளாகியதை
அடுத்து நடாத்தப்பட்ட அன்ரிஜன் மற்றும்
பிசிஆர் பரிசோதனைகளின் போது மேலும்
பத்து பேருக்கு கொவிட்-19 உறுதிசெய்யப்பட்
டதை அடுத்து தொற்று உறுதியானோர்
தனிமைப்படுத்தும் நிலையங்களுக்கு
அனுப்பி வைக்கப்பட்டனர்.
ஏனைய உத்தியோகத்தர்கள்
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள
தாகவும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை
மாகாண கல்வி பணிப்பாளரை பிசிஆர் பரி
சோதனைக்கு உட்படுத்தப்பட்ட
போது அவருக்கு கொரோனா தொற்று
இல்லை(Negative) எனவும் அறிவிக்கப்
பட்டுள்ளதாக கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் எம்.டி.ஏ.நிசாம் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment