மூன்று தசாப்தங்களாக தொழிற்சங்கவாதியாக இருந்த அமரர் வேலு முத்துகிருஸ்ணனின் 12 வது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு முத்துகிருஸ்ணன் நினைவுப்பேரவையின் ஏற்பாட்டில் 1500 தொழிலாளர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கும் நிகழ்வு தொடர்ந்து ஒரு வார காலமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது
பேரவையின் செயலாளர் பிரதேசசபை உறுப்பினர் முத்துகிருஸ்ணன் ராமச்சந்திரனின் வேண்டுகோளுக்கிணங்க அறம் அமைப்பு - இலங்கை சீன ஊடகவியலாளர் ஒன்றியம், சமாதானம் மற்றும் நட்புறவு சீன அறக்கட்டளையின் அனுசரணையில் 1 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பெருமதியான முகக்கவசங்கள் வெப்பஅளவீட்டுமாணியும் நோர்வூட் பிரதேசசபைக்குற்பட்ட சமர்ஹில் வட்டாரம் - டங்கல், ஒஸ்போன், காசல்றி , கிளர்வட்டன்,லெதண்டி, நோட்டன்,மிட்போட், மால்புறோ கார்பெக்ஸ் புரொடக் தோட்டங்களை சேர்ந்த 1500 தொழிலாளர்ளுக்கு கொவிட் 19 ஐ வெல்வோம் எனும் தொனிப்பொருளில் முகக்கவசங்களும் சிறுவர் நிலையங்களுக்கு உடல்வெப்பஅளவீட்டுமாணியும் வழங்கப்பட்டதுடன் தோட்ட முகாமையாளர்கள் வைத்திய அதிகாரிகள் வெளிகள உத்தியோகஸ்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர்
அமரர் வே. முத்துகிருஸ்ணன் என்பவர் யார்?
அமரர் வே. முத்துகிருஸ்ணன் அட்டன் லெதண்டி தோட்டத்தினை பிறப்பிடமாகக் கொண்டு வேலு, அழகமாள் தம்பதிகளின் இரண்டாவது மகனான இவர் ராசன் பார்வதியை மனைவியாக கரம்பிடித்து மூன்று பிள்ளைகளின் தந்தையானார்.
லெதண்டி தோட்ட பாடசாலையில் ஆரம்ப கல்வியை கற்ற இவர் நூற்றாண்டு வரலாற்றை கொண்ட பல ஆயிரம் கல்விமான்களை உருவாக்கி இன்றும் சிறந்த கல்விமான்களை உருவாக்கிக்கொண்டிருக்கும் அட்டன் கல்வி வலயத்திற்குட்பட்ட டங்கல் தமிழ் வித்தியாலத்தில் கல்வியை தொடர்ந்தார்.
கற்றலில் சிறந்து விளங்கிய இவர் இளம் வயதிலேயே தொழிற்சங்க ஈடுபாடு கொண்ட நிலையில் 1977ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் இலங்கை தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் ஊடாக தொழிற்சங்க பிரதிநிதியாக தனது அரசியல் வாழ்வை ஆரம்பித்தார்.
சுமார் மூன்று தசாப்த காலமாக தொழிற்சங்க அரசியலில் ஈடுபட்ட இவர், தொழிற்சங்க சார் விடயங்களை முழுமையாக கற்றுக்கொள்வதில் ஆர்வமாகச் செயற்பட்டார்.
அதற்கமைவாக உள்நாடு உட்பட இந்தியா, மலேசியா போன்ற நாடுகளில் இடம்பெற்ற தொழிற்சங்க சார் கருத்தரங்குகளில் பங்குபற்றி கிரம்மாக பயிற்சிகளை பெற்றுக்கொண்ட இவர் சிறந்த அரசியல் ஆளுமையாகவும் விளங்கினார். தன்னுடன் தொழில்புரியும் சக உறுப்பினர்களையும் பயிற்றுவிப்பவராகவும் விளங்கினார். சுமார் மூன்றுதசாப்தங்களாக தொழிற்சங்கவாதியாக இருந்து ஓய்வு பெற்றார்
முன்னாள் பிரதி நீதி அமைச்சராகவும் ட்ரஸ்ட் நிறுவனத்தின் தலைவராகவும் இருந்து இன்றும் அரசியல் பயணத்தை தொடரும் வி.புத்திரசிகாமணி, மலையக மக்கள் முன்னணியின் காரியாலயத்தில் பணிபுரியும் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான நடராஜ், தொழிலாளர் தேசிய சங்கத்தின் காரியலாயத்தில் பணிபுரியும் ஜோசப்போன்றோர் அமரர் வே.முத்துகிருஸ்ணனுடன் சமகாலத்தில் பணியாற்றிவர்கள் எனலாம்.
2019ஆம் ஆண்டு பெப்ரவரி 17 ம் திகதி சுகவீனமுற்ற நிலையில் கண்டி வைத்தியசாலையில் இயற்கை எய்தினார் . அமரர் முத்துகிருஸ்ணனின் நினைவு நாளை முன்ணிட்டு அன்னாரின் இளைய மகனான ஊடகவியலாளரும் பிரதேசசபை உறுப்பினருமாகிய ராமச்சந்திரனை செயலாளராக கொண்டு முத்துகிருஸ்ணன் நினைவுப்பேரவை வருடந்தோறும் கற்றல் மற்றும் விளையாட்டு துறைக்கு ஊக்குவிப்பு திட்டங்களை செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :
Post a Comment