தமிழ் இளைஞர்களின் இரத்ததான முகாம்..


ஏறாவூர் நிருபர்- நாஸர்-

 மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அண்மைக்காலமாக நிலவிவரும் இரத்த தட்டுப்பாட்டினைக் கருத்திற்கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான முகாம் இன்று 26.02.2021 ஏறாவூரில் நடைபெற்றது.

ஏறாவூர் 4 ஆம் குறிச்சி தமிழ் இளைஞர்கள் கழகத்தினால் ஒழுங்கு செய்யப்பட்ட இந்த இரத்த தான முகாமில் பல இளைஞர் யுவதிகள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு இரத்த தானம் செய்தனர்.

இரத்தத்தினை தானம் செய்வதனால் உடல் ஆரோக்கியத்திற்கும் ஆன்மீக ரீதியிலும் ஏற்படும் நன்மைகள் தொடர்பில் பொதுமக்களை விழிப்புணர்வூட்டி மூட நம்பிக்கைகளை தோற்கடிக்கச்செய்வதே இத்திட்டத்தின் நோக்கமாகுமென ஏற்பாட்டாளர் எஸ்.பவதரகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள்ää தாதியர்கள் மற்றும் இரத்த வங்கியின் பொறுப்பாளர் ரீ. ஜெயராஜ் உள்ளிட்ட பலர் இங்கு பணியாற்றினர்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சமீபகாலமாக இரத்தம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதனால் அயல் மாவட்டங்களான அம்பாறை மற்றும் பொலன்னறுவை போன்ற வைத்தியசாலைகளிலிருந்து இரத்தம் இரவல் வாங்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலை ஏற்பட்டுள்ளதாக இங்கு உரையாற்றிய டாக்டர் திருமதி கே. மதியழகன் குறிப்பிட்டார்.


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி இரத்த நன்கொடையாளர்களது ஒத்துழைப்புடனேயே செயற்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :