தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ”உங்களுக்கு ஒர் வீடு நாட்டுக்கு நிழல்”



அஷ்ரப் ஏ சமத்-
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் ”உங்களுக்கு ஒர் வீடு நாட்டுக்கு நிழல்” எனும் பிரதமரும் வீடமைப்பு நகர அபிவிருத்தி அமைச்சருமான மகிந்த ராஜபக்சவின் வீடமைப்பு கொள்கைத் திட்டத்தின் கீழ் நாடுமுழுவதிலும் கடந்த ஆண்டு ஒவ்வொறு பிரதேச செயலாளா் பிரிவுகளிலும் 14200 வீடுகளை வறுமைக்கோட்டில் வாழும் கிராமிய மக்களுக்கு மாணிய அடி்பபடையில் நிதியுதவியளித்து தனி வீடுகளை நிர்மாணித்து வருகின்றது.
அந்த வகையில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்டத்திலும் ஒவ்வொறு பிரதேச செயலாளா் பிரிவிலும் இரண்டு வீடுகளை அப்பிரதேசத்தில் வறுமைக்கோட்டில் வாழுமு் வீடுகள் அற்ற குடும்பங்களைத் தெரிபு செய்து வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. இவ் திட்டத்தினை கல்முனை உள்ள வீடமைப்பு உப அலுவலகத்தின் ஊடாக பொத்துவில் ,சம்மாந்துறை கல்முனை வீடுகளை நிர்மாணித்து வருகின்றது. கல்முனை தமிழ் பிரதேச செயலகம், மற்றும் நாட்பட்டிமுனை , பிரதேசங்களில் கடந்த வாரம் 5 வீடுகளை நிர்மாணித்து பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டது. . இந் நிகழ்வுகள் கடந்த பெப்ரவரி 7ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவா் ரேனுகா பெரேரா தலைமையில் கல்முனையில் இடம்பெற்றது. இவ் வைபவத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பொதுமுகாமையாளா் லலித் எதிரசிங்க , கல்முனை உப அலுவலகத்தின் முகாமையாளா் எம். இப்றாகீம், அம்பாறை வீடமைப்பு மாவட்ட முகாமையாளா் , கிழக்கு மாகாண வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உறுப்பிணா் றிஸ்லி முஸ்தபா, பிரதேச செயலாளா் மக்கள் பிரநிதிகளும் கலந்து கொண்டனா்.
இவ் வீடமைப்புத் திட்டம் சகல மாவட்டங்களிலும் உள்ள ஒவ்வொறு பிரதேச செயலாளா் பிரிவிலும் இரண்டு அல்லது நான்கு வீடுகள் நிர்மாணிக்கும் திட்டத்திற்கு பயணாளிகளை பிரதேச செயலாளரினால் தெரிபு செய்யப்பட்டு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையிற்கு வழங்கப்பட்டு அக் குடும்பங்களுக்கு 2 - 5 இலட்சம் ருபா வரை வீடமைப்பு உதவி நிதி அல்லது குறைந்த வட்டி அடிப்படையிலான வீடமைப்பு கடன் வழங்கப்படுகின்றது. இவ் வீடுகளை தேசிய வீடமைப்பு அபிருத்தி அதிகார சபையின் தொழில் நுட்ப உஸ்த்தியோகத்திரின் மேற்பாா்வையின் கீழ் தொழில்நுட்ப ஆலோசனை வழங்கப்பட்டு 4 மாத காலத்திற்குள் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்படுகின்றது.
இதனைவிட வட கிழக்கில் யுத்தத்தினால் வீடுகழை இழந்து இடம்பெயா்ந்து வாழும் மக்களுக்கும் இந்திய நாட்டின் நிதி உதவித்திட்டத்தின் கீழும் வீடமைப்புத்திட்டம் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றன. ஒரு வீடொன்றைக் நிர்மாணித்துக்கொள்ளவென 3- 5 இலட்சம் ருபா நிதி உதவி வழங்கப்பட்டு பயனாளிகளின் பங்களிப்புடன் 10 -15 இலட்சம் பெறுமதியான வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. இவ் வீடுகள் அந்த மாவட்ட வீடமை்பபு அதிகார சபையின் முகாமையளரினால் மேற்பாா்வைசெய்யப்பட்டு வீடுகள் நிர்மாணிக்கப்படுகின்றன. தமக்கென ஒரு வீடொன்றைக் நிர்மாணித்துக் கொள்ள வீட்டு உரிமையாளருக்கு 5- 6 பேர்ச் அளவு கொண்ட காணித்துண்டு ஒன்று கட்டாயம் இருத்தல் வேண்டும் அல்லது வீட்டினை அத்திவாரம் அல்லது கூரை மட்டத்தில் நிர்மாணித்து அதனை பூரணப்படுத்திக் கொள்ள வசதியற்ற குடும்பங்களும் பிரதேச செயலாளா் ஊடாக அனுமதிக்கப்பட்டு வீடமைப்பு மாவட்ட முகாமையாளருக்கு விண்ணப்பிக்க முடியும். அதனை வீடமைப்பு தொழில் நுட்ப அதிகாரி பரிசீலித்து முகாமையாளாின் அனுமதியுடன் வீடுகள் நிர்மாணிக்க நிதி உதவி அல்லது வீடமைப்புக் கடன்கள் வழங்கப்படும்.
தமக்கென்று ஒரு காணித்துண்டு இல்லாதவா்களுக்கு இவ் வீடமைப்புக் கடனோ நிதியுதவி வழங்கபடமாட்டாது.
வீடமைப்பு அதிகார சபைக்கு அப்பிரதேச செயலாளா் அல்து மாவட்ட செயலாளா்கள் அரச காணிகளை வழங்குமிடத்து அக் காணித்துண்டில் வீடொன்றை நிர்மாணிக்க வசதிகள் செய்து கொடுக்கப்படும். தற்போதைய காலகட்டத்தில் மாநகர சபை நகர சபைகள் உளள் உள்ளுராட்சி பிரதேசங்களில் அரச காணிகள் அறவே இல்லாமையால் வீடமைப்புக் மாதிரிக் கிராமங்களை நிர்மாணிக்க முடியாமல் உள்ளது. அரச வன வளங்களையோ நெல் வயல் காணிகளில் மண் நிரப்பி வீடுகள் நிர்மாணிப்பதனையும் அரசாங்கம் முற்றாக நிறுத்தியுள்ளது. இதனால் கூடுதலான வீடுகள் நிர்மாணிக்க காணித் தட்டுப்பாடு நிலவிவருகின்றது. இதன் காரணமாக மாநகர சபைகளில் தொடா்மாடி வீடுகளை நிர்மாணித்து மாதாந்தம் வாடகை அடிப்படையில் செலுத்தும் வகையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ”சியப்பத்த வீடமைப்புத்” திட்டமொன்றை நாடு முழுவதிலும் ஆரம்பித்துள்ளது. யாழ்ப்பாணம், குருநாகல், மட்டக்களப்பு, கண்டி, அம்பாறை , அனுரதபுரம், கொழும்பு காலி, போன்ற மாவட்டங்களில் 100 தொடா்மாடி வீடுகள் கொண்ட 4 அடுக்கு மாடிகளை நிர்மாணிக்க உத்தேசித்து நிர்மாணித்து வருகின்றது. கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவை சொ்ய்சா புர, ஹோமகம, யாழ்ப்பாணத்தில் நாவட்குடா கம்பஹா , குருநாகல் காலி,போன்ற பிரதேசங்களில் தொடா்மாடிகள் கடந்த ஜனவரி மாதம் வீடமைப்பு இராஜாங்க அமைச்சா் இந்திக்க அனுரத்தவினால் அடிக்கல் நாட்டப்பட்டு நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. .

ஒவ்வொறு தொடா்மாடியும் 40 - 60 இலட்சம் ருபா பெறுமதிக்கு மத்திய தர வகுப்பினா்கள் விண்ணப்பிக்க முடியும். பெறுமதி்த் தொகையி் ஆகக்குறைந்தது 20வீதத்தினை முற்பணமாக செலுத்தி மிகுதித் தொகையை 10 அல்லது 25 வருடங்கள் மாதாந்த முறையில் செலுத்தக் கூடிய வகையில் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஒரு திட்டத்தினையும் நடைமுறைப்படுத்தியுள்ளது. இத் தொடா்மாடி வீடுகள் நிர்மாணப்பணிகள் 2022 ஆம் ஆண்டு நடுப்பகுதியில் பூரணப்படுத்தப்படும். . கொழும்பு மாவட்டத்தில் சகல முடுக்கு வீடுகளை அகற்றி தொடா்மாடி வீடுகளை நிர்மாணிக்கும் திட்டத்தினை பத்தரமுல்லல செத்சிரிபாய உள்ள நகர அபிவிருத்தி அதிகார சபை தொடா்மாடி வீடுகள் நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. முடுக்கு வீடுகளை அகற்றிய மக்களுக்கள் அவ் வீடுகள் நிர்மாணிக்க்பபடுகின்றன மத்திய தர வா்க்கத்தினருக்க வங்கி ஊடாக பெறுமதி செலுத்தும் வகையில் நகர அபிவிருத்தி சபையினால் வழங்கப்படும். நகர அபிவிருத்தி அதிகார சபை கொழும்பில் ஏற்கனவே கொம்பனி வீதி, மாளிகாவத்தை, மட்க்குழி, பொரளை, தெமட்டக்கொட போன்ற் பிரதேசங்களில் 10 மாடிவரை வீடுகளை நிர்மாணித்துள்ளது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :