ஜெய்சங்கரை - ஹக்கீம்சந்திக்காமை எதற்காக?

பூமுடீன்-
ந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரின் இலங்கை விஜயத்தின் போது - முஸ்லிம் தரப்புடனான சந்திப்பு இடம்பெறவில்லை.

இலங்கையில் - முஸ்லிம் சமுகம் , ஜனாஸா எரிப்பு தடைக்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் இன்றைய நிலையில் , ஜெய்சங்கரின் விஜயம் முக்கியத்துவமிக்கதாகும்.

முஸ்லிம் கட்சிகளான முகா - மகா - ஜெய்சங்கரை , தனித்தோ அல்லது கூட்டாகவோ சந்திக்கும் என எதிர்பார்க்கப்பட்டபோதும் அது இடம்பெறவில்லை.

டக்ளஸ் - மனோ கணேசன் மற்றும் வியாழேந்திரனையையும் சந்தித்தார் - இந்திய வெளிவிவகார அமைச்சர்.

முஸ்லிம் தரப்பை அவர் சந்திக்காமை குறித்து தேடிப்பார்த்த வேளை , சந்திப்புக்காக - ஹக்கீம் முயற்சி மேற்கொள்ளவில்லை அல்லது நேரம் ஒதுக்கி கேட்கவில்லை என்று தெரியவந்தது.

ரிஷாத் பதியுதீனின் - சந்திப்புக்கான கோரிக்கை இராஜதந்திர ரீதியில் தவிர்க்கப்பட்டது என உறுதியாக அறிய முடிந்தது.

முஸ்லிம் சமுகம் - இன்று பெரும் துயரத்திற்குள் சிக்கித் தவிக்கும் இத் தருணத்தில் , முஸ்லிம்களின் ஏக தலைவன் நான்தான் என்று கூறிக்கொள்ளும் ஹக்கீம் , ஜெய்சங்கரை சந்திக்க - கிஞ்சித்தும் முயற்சிக்காமை வேதனைக்குரிய விடயமாகும்.

கொரோனா ஜனாஸா எரிப்பு விவகாரம் மற்றும் இனவாத செயற்பாடுகள் தொடர்பில் அறிக்கை விடும் ஹக்கீமுக்கு - ஜெய்சங்கரின் விஜயத்தை அரிய வாய்ப்பாக பயன்படுத்தி இருக்கலாம்.

இலங்கை முஸ்லிம்களின் மனோநிலையை எடுத்துக் கூறி அழுத்தம் ஒன்றை அல்லது இலங்கை அரசிடம் பேசுமாறு கூறுவதற்காவது இந்த சந்திப்பை பயன்படுத்தி இருக்கலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :