கொரோனா காலத்தில் சேவையாற்றிய உயர் பொலிஸ் அதிகாரிகள் கௌரவிப்பு...

எஸ்.எம்.எம்.முர்ஷித்-

ட்டமாவடி தேர்டீன் இளைஞர்; கழகத்தின் ஏற்பாட்டில் கொரோனா காலத்தில் சிறந்த முறையில் சேவையாற்றிய பொலிஸ் உயர் அதிகாரிகளை கௌரவிக்கும் நிகழ்வு மீராவோடை கலாசார மண்டபத்தில் இன்று திங்கட்கிழமை நடைபெற்றது.

சமூகசேவையாளர் கலாநிதி எம்.பி.முஸம்மில் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, மீராவோடை தாருஸ்ஸலாம் அதிபர் மௌலவி ஏ.எல்.எம்.ஹனிபா, இளைஞர் பாராளுமன்ற உறுப்பினர், இளைஞர் கழக தலைவர் எம்.சஜித், கழக உறுப்பினர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஏற்பட்ட கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக பிரதேசம் தனிமைப்படுத்தலில் இருந்து போது மக்களின் பாதுகாப்பு கருதி திறம்பட சேவையாற்றியதுடன், பொலிஸ் பிரிவில் காணப்படும் போதைப் பொருள் பாவனையை கட்டுப்படுத்துவதற்கும் திறம்பட சேவையாற்றிய பொலிஸ் உயர் அதிகாரிகள் கௌரவிக்கப்பட்டனர்.

இதில் வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஜி.எஸ்.ஜெயசுந்தர, வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன, போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார ஆகியோருக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன், கழக உறுப்பினர்களுக்கும் நினைவுப் பொருள் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :