மருதமுனை சமுர்த்தி வங்கி கணனி மயப்படுத்தப்பட்டுள்ளது; தேசிய ரீதியில் 40வது இடத்தில் - மேலதிக அரசாங்க அதிபர் நேரடி விஜயம்ஏ.எல்.எம்.ஷினாஸ்-
லங்கை சமுர்த்தி திணைக்களத்தின் தேசிய
வேலைத் திட்டத்தின் கீழ் நாட்டிலுள்ள அனைத்து சமூர்தி வங்கிகளையும் கணனி மயப்படுத்தி பொதுமக்களுக்கு துரித சேவையை வழங்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த திட்டத்தின் கீழ் மருதமுனை - நட்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியின் சகல கொடுக்கல் வாங்கல் செயற்பாடுகளும் கணனி மயப்படுத்தப்பட்டு தற்போது பொதுமக்களுக்கு சேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

மருதமுனை - நற்பிட்டிமுனை சமுர்த்தி வங்கியில் சுமார் 20000 பொதுமக்களுடைய வங்கி கணக்குகள் நடைமுறையில் உள்ளதோடு சமூர்த்தி உதவி பெறும் 3400 குடும்பங்களின் வங்கி கணக்குகள் செயல்பாட்டில் உள்ளன. இந்த வங்கி கணக்குகள் அனைத்தும் தற்போது கணனி மயப்படுத்தப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது.

கணனி மயப்படுத்தப்பட்டு துரித சேவைகளை வழங்கும் வங்கிச் செயற்பாடுகளில் மருதமுனை - நற்பிட்டிமுனை வங்கி அம்பாறை மாவட்டத்தில் முதலாம் இடத்தினையும் தேசிய ரீதியாக 40 ஆவது இடத்தினையும் பெற்றுள்ளது.

அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபரும் சமூர்த்தி திணைக்களத்தின் பதில் மாவட்ட பணிப்பாளருமான வி. ஜெகதீசன் இந்த வங்கிக்கு (13) நேரடியாக விஜயம் செய்தார். இதன்போது வங்கி கணனி மயப்படுத்தப்பட்டு பொதுமக்களுக்கு அர்ப்பணிப்போடு பணியாற்றி வரும்
சமுர்த்தி திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஊழியர்களை பாராட்டியதுடன் வங்கிச் ஏற்பாடுகளையும் பார்வையிட்டார்.

இந்த நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் எம். எம்.முஹம்மட் நஸீர், சமுர்த்தி வங்கி முகாமையாளர் சட்டத்தரணி எம்.எம்.எம். முபீன், சமூர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் ஏ.ஆர்.எம்.சாலிஹ் உட்பட சமுர்த்தி திணைக்களத்தின் தொழில்நுட்ப பிரிவு உத்தியோகத்தர்கள், சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :