பீலி வடிகான்களை அகற்றுமாறு மக்கள் போர்க்கொடி! மாநகரசபைஉறுப்பினர்ராஜனின் ஏற்பாட்டில் அதிகாரிகள் இன்று விஜயம்.



வி.ரி.சகாதேவராஜா-
வீதி புனரமைப்பின்போது போடப்பட்டிருக்கும் 25மீற்றர் நீளமான பீலி வடிகானை அகற்றி தமது வீடு வளவுகளை வெள்ளத்தில் தாழாது தடுக்குமாறு கல்முனை உடையார் வீதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

வீதி அபிவிருத்தித் திணைக்கள பொறியியாளரிடம் வேண்டுகோள் விடுத்து நடவடிக்கை எடுக்கப்படாத காரணத்தினால் அவர்களது வட்டாரத்திற்குரிய கல்முனை மாநகரசபை த.தே.கூ.உறுப்பினர் சந்திரசேகரம் ராஜனினிடம் முறையிட்டனர்.

அவர் நேற்று அங்கு விரைந்து புனரமைப்பிற்குபொறுப்பாக நின்ற பொறியியாளருடன் கந்துரையாடினார். பொதுமக்களும் தமது நியாயங்களைக்கூறினர்.

நியாயங்கள் சரியானவையாகஇருந்தாலும் வீதிஅபிவிருத்தி திணைக்களமே தங்களுக்கு உத்தரவிடவேண்டும் என ஒப்பந்தப்பொறுப்பு பொறியியாளர் கூற அவ்விடத்திலேயே உறுப்பினர் ராஜன் உரிய அதிகாரியுடன் தொடர்புகொண்டார்.

வீதிஅபிவிருத்தித்திணைக்களத்தின் ஜ திட்டத்திற்கான பிராந்தியப் பொறியியாளர் வி.பரதன் தலைமையிலான குழுவினர் இன்று(21)) திங்கள் பிற்பகல் நேரடியாக அங்கு வருகைதருவதாக உறுப்பினர் ராஜனிடம் தெரிவித்தார்.

இன்று திங்கட்கிழமை உடையார் வீதி மக்களின் பிரச்சினை பெரும்பாலும் தீரலாமென்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :