சுமந்திரன் எம்.பி கல்முனை பிரச்சினையை தீர்க்காமல் புரியாணி சாப்பிடுகிறார்

பாறுக் ஷிஹான்-

மிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள்.ஆனால் சுமந்திரன் எம்.பி போன்றவர்கள் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும் என உல‌மா க‌ட்சி தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.

அம்பாறை ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை(20) மாலை இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில்


கல்முனை பிரச்சினையாக இருக்கட்டும் முஸ்லீம் தமிழ் பிரச்சினையாக இருக்கட்டும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் போன்றவர்கள் இரண்டு வகையான நிலைப்பாட்டினை எடுக்கின்றனர்.ஒன்று மேடைகளில் பேசுகின்ற போது தமிழ் முஸ்லீம் ஒற்றுமை வேண்டும் என்பார்கள்.கீழ் இறங்கி வருகின்ற போது தமிழ் முஸ்லீம் சமூகத்தினை எவ்வாறு பிரிப்பது என்ற பாங்கில் செல்வதை நாம் காண்கின்றோம்.சுமந்திரன் கல்முனை பிரச்சினையை எப்போதோ தீர்த்திருக்க முடியும்.


ஆனால் அவர்கள் என்ன செய்கின்றார்கள்?தமிழ் மக்களை ஒரு பக்கம் மூட்டி விட்டு அங்கு ஹக்கீமுடன் சேர்ந்து புரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கின்றார்கள்.இதனை நாம் பல தடவை கண்டுள்ளோம்.நீங்கள் புரியாணி சாப்பிடும் போதாவது இதை பற்றி பேச முடியாதா?ஹக்கீமும் சம்பந்தனும் இணைந்து புரியாணி சாப்பிட முடியுமென்றால் ஏன் கல்முனையில் தமிழ் மக்களும் முஸ்லீம் மக்களும் இணைந்து புரியாணி சாப்பிட முடியாது.என்று நாங்கள் கேட்கின்றோம்.மக்கள் மத்தியில் உசுப்பேத்த வேண்டும் குழப்பங்களை ஏற்படுத்த வேண்டும். முஸ்லீம்கள் தமிழ் மக்களுடன் இணைந்து பயணிக்க வேண்டும் என அண்மையில் சுமந்திரன் கூறி இருந்தார்.


ஆனால் தமிழ் மக்களுக்கும் முஸ்லீம் மக்களுக்கும் இடையே இவ்வித பிரச்சினையும் இல்லை.அரசியல்வாதிகள் தான் பிரச்சினையை தூண்டுகின்றனர் என்பதே எமது கருத்து என்றார்.


--Thanks & Best Regards,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :