சாய்ந்தமருதில் "மீஸானின்" சுனாமி நினைவு தின துஆ பிராத்தனை.


டந்த (2004/12/26) உலகை தாக்கிய சுனாமி பேரலையின் 16 ஆவது ஆண்டு நினைவு தின துஆ பிராத்தனையும் குராஆன் தமாம் செய்யும் நிகழ்வும் இன்று (26) காலை அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் ஏற்பாட்டில் சாய்ந்தமருது அல்- அக்பர் ஜூம்மாபள்ளிவாசலில் நடைபெற்றது.

சுனாமியால் உயிர் நீத்த உறவுகளுக்கான துஆ பிரார்த்தனையை சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மா பள்ளிவாசலின் பேஸ் இமாம் அல்-ஹாபிழ் மௌலவி எம்.ஐ.எம். றியாஸ் (அல்தாபி) நிகழ்த்தினார்.

இந்நிகழ்வில் மீஸான் பௌண்டஷன் தவிசாளர் நூருல் ஹுதா உமர், சாய்ந்தமருது அல் அக்பர் ஜூம்மாபள்ளிவாசலின் தலைவர் ஏ.இஸ்ஸதீன், உப தலைவர்கள், பொருளாளர் உட்பட நிர்வாகிகள், அல்- மீஸான் பௌண்டஷன் ஸ்ரீலங்காவின் பிரதிச்செயலாளர் ஏ.ஏசி.எம்.நிஸார் உட்பட செயற்குழு உறுப்பினர்கள், சிலோன் மீடியா போரத்தின் தலைவர் றியாத் ஏ. மஜீத், சாய்ந்தமருது சத்குரு மக்காம் தலைவர் எம்.ஏ.எம். ஜப்பார், சாய்ந்தமருது மருதம் கலைக்கூடலின் தலைவர் அஸ்வான் எஸ் மௌலானா, செயலாளர், பிரதித்தலைவர் உட்பட முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :