தன் மீதான குற்றச்சாட்டை Skype ஊடாக நிராகரித்தார்- ரிஸாட் பதியூதீன்

J.f.காமிலா பேகம்-

ஸ்டர் ஞாயிறு தினத்தில் குண்டுத் தாக்குதல்களை நடத்திய தீவிரவாதிகளில் ஒருவரான இன்ஸாப் அஹமட்டின், திருணத்திற்கு ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ரிஸாட் பதியூதின் சாட்சிக் கையெழுத்திட்டிருப்பது தெரியவந்துள்ளது.

இதனை நேற்று நடைபெற்ற விசாரணையில் ஜனாதிபதி ஆணைக்குழு முன் அவரே ஒப்புக்கொண்டுள்ளார்.

கொழும்பு மகஸின் சிறையில் இருந்தவாறு ஸ்கைப் தொழில்நுட்பம் ஊடாக, ஜனாதிபதி ஆணைக்குழு முன் முன்னாள் அமைச்சர் ரிஸாட் பதியூதீன் சாட்சியமளித்தபோது கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு கூறினார்.

பலதடவை இன்ஸாப் தனது தொலைபேசிக்கு அழைப்பு எடுத்திருந்தாலும், தான் அவர் தற்கொலை குண்டுதாரியாக மாறிவிடுவார் என நினைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை தெஹிவளையில் வைத்து கைது செய்யப்பட்ட சந்தேக நபரை விடுவிக்க அப்போதைய இராணுவத் தளபதி ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் மஹேஸ் சேனாநாயக்கவுக்கு தொலைபேசியில் அழுத்தம் கொடுத்ததாக சொல்லப்படும் குற்றச்சாட்டையும் நிராகரிப்பதாக ரிஸாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :