அட்டனை அண்மித்த தோட்டப்பிரதேசங்களில் ஒன்பது பேருக்கு தொற்று உறுதியானது


க.கிஷாந்தன்-

ட்டனை அண்மித்த தோட்டப்பகுதிகளில் எடுக்கப்பட்ட பி.சீ.ஆர். பரிசோதனைகளின் போது அதில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக மாவட்ட சுகாதார வைத்திய அதிகாரி அட்டன் காரியாலயத்தின் பொது சுகாதார பரிசோதகர் காமதேவன் தெரிவித்தார்.

இது குறித்த அவர் கூறுகையில், கொழும்பிலிருந்து வருகை தந்த பலருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் வெலிஓயா தோட்டத்தில் மூவருக்கும், ஸ்டெரதன் தோட்டத்தில் ஒருவருக்கும் பிளக்வோட்டர் தோட்டத்தில் மூவருக்கும் அம்பத்தலாவையில் ஒருவருக்கும் கொட்டகலை டெரிக்கிளயார் தோட்டத்தில் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

இவர்கள் அனைவருமே தலைநகரிலிருந்து வருகை தந்தவர்களாவர். அதே வேளை நாம் இப்போது கலுகல்ல சோதனை சாவடிக்கு அருகாமையிலேயே கொழும்பிலிருந்து பஸ்களில் வருகை தருவோருக்கு பி.சீ.ஆர் பரிசோதனைகளை செய்து வருகின்றோம். மேலும் இவ்வாறு தலைநகரிலிருந்து வருவோர் பற்றிய தகவல்களை எமக்கு அறியத்தருமாறு பொது மக்களை கேட்டுக்கொள்கிறோம். இது பரவல் வீதத்தை கட்டுப்படுத்த உதவும் என்றார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :