சிலோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கு கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு


எம்.என்.எம்.அப்ராஸ்-

சி
லோன் மீடியா போரத்தின் ஏற்பாட்டில் மீனவர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு சாய்ந்தமருது -மாளிகைக்காடு
கடற்கரை வீதியில்
இன்று( 22)இடம்பெற்றது.

மீனவர்களுக்கான கொவிட்19 விழிப்புணர்வு நிகழ்வு
சிலோன் மீடியா போரத்தின் தலைவர் கலாநிதி றியாத் ஏ.மஜீத் தலைமையில் இடம் பெற்றது.

இந்நிகழ்வுக்கு நிந்தவூர் ஆயுர்வேத ஆராய்ச்சி வைத்தியசாலையின்
பணிப்பாளர் வைத்தியர் கே.எல்.எம். நக்பர், இராஜாங்க அமைச்சர் விமலவீர திசாநாயக்கவின் கல்முனை இணைப்பாளர் எம்.வை.எம்.நிப்ராஸ், மாளிகைக்காடு மீனவர் சங்க தலைவர் எம்.ரீ.எம்.நெளசாத், சிலோன் மீடியா போரத்தின் பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்முஜாஹித், பொருளாளர் யூ.எல்.நூருல் ஹூதா, பிரதித் தலைவர் எஸ்.அஷ்ரஃப்கான் உள்ளிட்ட போரத்தின் செயற்குழு உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

இதன்போது கொவிட் 19 சுகாதார வழிமுறை பற்றிய விழிப்புணர்வு ஸ்டிக்கர், துண்டுப் பிரசுரம், நோய் எதிர்ப்பு ஆயுர்வேத பானம் மற்றும் முகக்கவசம் என்பன மீனவர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு மாளிகைக்காடு மீனவர் சங்கத்தின் பங்குபற்றலுடன் இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :