நாட்டில் பரவியுள்ள கொரோனா வைரஸ் தொற்றை சாதகமாக பயன்படுத்தி அம்பாறை மாவட்டத்தில் கட்டுப்பாட்டு விலையை மீறி அரிசி விற்பனை செய்த 09 வர்த்தகர்களுக்கெதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக, நுகர்வோர் அதிகார சபையின் அம்பாறை மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் தெரிவித்தார்.
கட்டுப்பாட்டு விலையை மீறி கூடுதலான விலைக்கு அரிசி விற்பனை செய்யப்படுவதாக, மக்கள் செய்யப்பட்ட முறைப்பாட்டையடுத்து நுகர்வோர் அதிகார சபையின் புலனாய்வு உத்தியோகத்தர்களால் சனிக்கிழமை (10) அட்டாளைச்சேனை, அக்கரைப்பற்று மற்றும் திருக்கோவில் ஆகிய பிரதேசங்களில் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பின் போதே இவர்கள் கண்டு பிடிக்கப்பட்டதாக, கூறினார்.
நாட்டரிசி, வெள்ளை மற்றும் சிவப்பு 96 ரூபாவாகவும், சம்பா அரிசி மற்றும் சிவப்பு 98 ரூபாவாகவும், பச்சை அரிசி வெள்ளை மற்றும் சிவப்பு 93 ரூபாவாகவும், கீரிச்சம்பா அரிசி 120 ரூபாவாகவும், கட்டுப்பாட்டு விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், தெரிவித்தார்.
நாடுதழுவிய ரீதியில் இவ் விசேட சுற்றி வளைப்பு முன்னெடுக்கப்பட்டதாகவும், மாவட்ட பொறுப்பதிகாரி என்.எம். சப்றாஸ் மேலும் தெரிவித்தார்.
0 comments :
Post a Comment