331,694 மாணவர்கள் இன்று புலமைப்பரிசில் பரீட்சை எழுதுகிறார்கள்..

காரைதீவு  சகா-

கொரோனா காரணமாக ஒத்திவைக்கப்பட்ட 2020ம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் பரீட்சை இன்று(11) ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.

புலமைப்பரிசில் தேர்வுக்கு, இம்முறை 331,694 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பரீட்சை இன்று 11ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். பகுதி 1 மு.ப. 09.30 - 10.30 மணிவரையும், பகுதி 2 11.00 - 12.15மணி வரையும் இடம்பெறும்.

இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கு சிங்கள மொழிமூலம் 248,072 மாணவர்கள், தமிழ் மொழிமூலம் 83,622 மாணவர்கள் தோற்றுகின்றனர்.கொரோனா தொற்று காரணமாக தனிமைப்படுத்தல் நிலையங்களில் தங்கியுள்ள மாணவர்களுக்கு தேர்வுக்கு அமர தேவையான வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் ஜெனரல் சனத் பூஜித தெரிவித்தார்.

சுகாதாரத் துறையினரின் அறிவுறுத்தல்களுக்கமைய, இந்த ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கிடையில்இ கம்பஹா மாவட்ட மாணவர்களுக்கு பரீட்சை நிலையங்களுக்கு செல்ல தேவையான போக்குவரத்து வசதிகள் வழங்கப்பட்டுள்ளது.
இதேவேளை இம்முறை புதிய நடைமுறைகள் பின்பற்றப்படவிருக்கின்றன.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :