நோட்டன் பிரிட்ஜ் எம்.கிருஸ்ணா-
பொகவந்தலாவையிலிருந்து குயினா தோட்டம் வழியான போபத்தலாவை வரையான பாதை புனரமைக்கப்படவுள்ளதாக வனஜீவராசிகள் அமைச்சர் சீ.பி ரத்நாயக தெரிவித்தார்
போபத்தலாவை பகுதிக்கு (18 )நேற்று விஜயமொன்றை மேற்கொண்ட அமைச்சர் போபத்தலாவ பகுதியிலுள்ள (ஹரித்தகந்த)சுற்றாடல் மலையை பார்வையிட அதிகளவில் வரும் சுற்றுலா பயணிகளின் நலன் கருதியில் பொகவந்தலா நகருக்கு வரும் போபத்தலாவை பிரதேச மக்களின் நலன் கருதியுமே மேற்படி பாதையை புரனமைக்கவுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்,
மேலும் அக்கரப்பதனை போபத்தலாவை மெனிக்பாம் வரையான 15 கிலோ மீட்டர் வரையான தூரம் காப்ட் பாதையாக அமைக்கும் வேலைத்திட்டம் 180 மில்லியன் நீதியொதுக்கீட்டில் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாதவும் அவர் தெரிவித்தார்,
0 comments :
Post a Comment