மரணித்தவர்களும் வாக்களிக்க முடியும் என்றிருந்தால் மாளிகைக்காடு மையாவாடி கடலுக்குள் சென்றிருக்காது!

முகம்மத் இக்பால், சாய்ந்தமருது-

ரலாற்றில் என்றுமில்லாதவாறு மாளிகைக்காடு கிராமத்தின் கரையோரமாக அமைந்துள்ள முஸ்லிம் மைய்யவாடி கடலின் அச்சுறுத்தலுக்கு இலக்காகியுள்ளது.

தொடர்ச்சியான கடலரிப்பினால் மையவாடியின் கடல்பக்கமாக அமைந்துள்ள சுற்றுமதிலின் சில பகுதி உடைந்துள்ளதுடன் அங்கு அடங்கப்பட்டுள்ள ஜனாசாக்களின் இருப்புக்கு பாதுகாப்பில்லாத நிலைமை உருவாகியுள்ளது.

இவ்வாறானதொரு கடல் அலையின் அச்சுறுத்தல்கள் ஒருபோதும் இருந்ததில்லை. இந்த கடலரிப்பினை தடுக்கும்பொருட்டு மாளிகைக்காடு, சாய்ந்தமருது மக்கள் இரவு பகலாக முன்னின்று தற்காலிக நடவடிக்கையாக மண்மூட்டைகளை மதிலுக்கு அரணாக அமைத்து வருகின்றனர். ஆனாலும் அதனையும் தாண்டி மதிலின் ஒரு பகுதி இடிந்து விழுந்துள்ளது.

இந்த நிலைமை தொடர்ந்து நீடித்தால் முழு மையவாடியும் கடலரிப்புக்கு இலக்காகி அங்கு அடங்கப்பட்துள்ள ஜனாசாக்களின் உடல் அவையங்கள் கடலில் இழுத்து செல்லப்படக்கூடிய வாய்ப்புக்கள் அதிகமாக உள்ளது.

இவ்வாறானதொரு நிலைமை ஏற்பட்டால் அது நாட்டின் தேசிய பிரச்சினையாக உருவெடுப்பதுடன், அதன் விபரீதங்கள் எவ்வாறு இருக்குமென்று நீங்களே கற்பனை செய்து பாருங்கள்.

குறித்த மையவாடி மாளிகைக்காட்டில் அமைந்திருந்தாலும், அது முஸ்லிம் சமூகத்துக்கு பொதுவானதாகும். அதன் இருப்புக்கு ஆபத்து வருகின்றபோது அதனை பொதுவான பிரச்சினையாக கையாள வேண்டும். இந்த பிரச்சினைக்கு அந்த சிறிய கிராமத்து மக்களால் மட்டும் தீர்வினை அடைந்துவிட முடியாது.

தேர்தல் காலங்களில் ஏகப்பட்ட வாக்குறிதிகளை வழங்கி மக்களின் வாக்குகளை சூறையாடி செல்கின்ற அரசியல்வாதிகள் பார்வையாளர்களாக இருந்துவிடாமல், இந்த பிரச்சினைக்கு நிரந்தர தீர்வினை வழங்க முன்வர வேண்டும்.

மர்ஹூம் ஏ.ஆர். மன்சூர் அவர்கள் அமைச்சராக இருந்தபோது கல்முனை கடற்கரை பள்ளிவாசல் மற்றும் மைய்யவாடி போன்றவற்றுக்கு இதுபோன்றதொரு பாரிய கடல் அரிப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டது.

அதற்கு நிரந்தர தீர்வினை வழங்கும்பொருட்டு மர்ஹூம் அமைச்சர் மன்சூர் அவர்களின் முயற்சியினால் குறித்த பிரதேசங்களை சுற்றி மலைக்கற்கள் குவிக்கப்பட்டது. அதனால் இன்றுவரைக்கும் அப்பிரதேசம் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.

அதுபோன்று மாளிகைக்காட்டு மைய்யவாடியின் கடல் பிரதேசத்துக்கும் மலைக்கற்கள் குவிக்கப்பட்டால் மட்டுமே நிரந்தரமாக மையவாடியினை பாதுகாக்க முடியும்.

இதுபோன்றதொரு நிலைமை சிங்கள பிரதேசங்களில் ஏற்பட்டால் அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டிருக்கும். ஆனால் இது சிங்களவர்கள் அல்லாத சிறுபான்மை மக்கள் வாழும் பிரதேசம் என்பதனால் அரசாங்கத்திடமிருந்து உடனடியாக நேரடி உதவிகளை எதிர்பார்க்க முடியாது.

இதற்கு நிரந்தர தீர்வினை வழங்குவதற்கு அரசியல்வாதிகளே முன்வர வேண்டும். மையவாடியில் அடங்கப்பட்டிருப்பவர்களுக்கு வாக்குரிமை இருந்திருந்தால், இப்போது அரசியல்வாதிகள் படையெடுத்திருப்பதுடன், ஏகப்பட்ட வாக்குறுதிகளையும் வழங்கிவிட்டு மறைந்திருப்பர்.

ஆனாலும் அது ஜனாசாக்கல்தானே என்று அலட்சியப்போக்கில் இருந்தால், அடங்கப்பட்டவர்களின் அன்புக்குரியவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்பதனை அரசியல்வாதிகள் மறந்துப்விடக்கூடாது.

பதவியை அடையும் நோக்கில் தேர்தல் காலங்களில் தங்களது வெற்றிக்காக கோடிக்கணக்கில் பணத்தினை செலவழிக்கின்ற அரசியல்வாதிகள் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றபோது மௌனமாக இருப்பது ஏன் ?

எனவே இது குறித்த பிரதேசத்துக்குரிய பிரச்சினை என்று இருந்துவிடாமல், அங்குள்ள மக்களுடன் இணைந்து இதயசுத்தியுடன் நிரந்தர தீர்வினை வழங்க அரசியல்வாதிகள் முன்வரவேண்டும்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :