நூருல் ஹுதா உமர், எஸ்.அஷ்ரப்கான்-
கல்முனை மாநகர சபைக்குட்பட்ட சாய்ந்தமருது கடற்கரை வீதியில் அமைந்துள்ள நூலகம் கடந்த கொரோனா காலத்திலிருந்து மூடப்பட்டு இதுவரை திறக்கப்படாமல் உள்ளமையினால் அப்பிரதேச மக்கள், மாணவர்கள் நாளாந்த பத்திரிகைகள் வாசிப்பதில் கடும் சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.
முன்னாள் கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபின் முயற்சியினால் அவரது தந்தையின் பெயரில் மீராசாஹிப் ஞாபகார்த்த வாசிகசாலையாக இது திறந்து வைக்கப்பட்டது.
தற்போது பாவனைக்குதவாததாக சுவர்கள் உடைந்த நிலையில், கால்நடைகளின் இருப்பிடமாக இந்த வாசிகசாலை மாறி வருகின்றது.
பாவனைக்குதவாத வகையில், புற்பூண்டுகள் முளைத்து காணப்படுகின்ற இந்த வாசிகசாலையினை
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதுடன், மீளப்புனரமைத்து ஆரம்பிப்பதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு மாநகர முதல்வர் சட்டத்தரணி ஏ.எம்.றக்கீப் மற்றும் ஆணையாளரைையும் பிரதேச மக்கள், மீனவர்களும் வேண்டி நிற்கின்றனர்.

0 comments :
Post a Comment