அரசியல்வாதிகள் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணம் என்று கூறியிருக்கின்றார் பிரதமர் மஹிந்த ராஜபக்ச.
கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இரவு நடந்த நூல் வெளியீட்டு நிகழ்வில் பிரதமர் கலந்துகொண்டார்.
நிகழ்வில் உரைநிகழ்த்திய அவர், முன்னாள் ஜனாதிபதி அமரர் ஜே.ஆர். ஜயவர்தனவின் மனைவி சிறந்த நோக்கத்தை உடையவராக இருந்தார்.
எனினும் தற்போதைய அரசியல்வாதிகள் பலர் சீர்கெட்டுப்போவதற்கு அவர்களுடைய மனைவிமாரே காரணமாகிவிடுகின்றனர். ஜே.ஆரின் மனைவியை பின்பற்றினால் சிறந்தது என்று அறிவுரையும் பிரதமர் வழங்கியிருக்கின்றார்.
0 comments :
Post a Comment