20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்கவில்லை -முஷாரப் எம்பியின் விளக்கம்.

இர்ஷாத் ஜமால்-

19ஆம் திருத்தச் சட்டத்தின் ஊடக, இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்றத் தேர்தல்களில் போட்டியிடுவதற்கு எதிராக கொண்டுவரப்பட்ட தடைச் சட்டத்தை செயலிழக்கச் செய்து, அவர்களுக்கும் வாய்ப்பளிக்கும் உரிமை 20ஆவது திருத்தச் சட்டத்தின் 17ஆவது பிரிவில் உள்ளடக்கப்பட்டிருந்தது.

20 ஆவது திருத்தச் சட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ள முகாவின் பாராளுமன்ற உறுப்பினர்களைப் போன்று சட்டத்தரணி முஷாரப் அவர்களும் தனது ஆதரவினை வழங்குவார் எனப் பலராலும் ஆருடம் போடப்பட்டது. முஷாரப் அவர்களும் விலைபோயுள்ளார் என்ற பதிவுகளும் சிலரால் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டிருந்தன.

நாட்டினதும், சிறுபான்மை மக்களினதும் எதிர்கால நலனை முதன்மைப்படுத்தி, தனது கட்சியின் முடிவிற்கு இணங்க 20ஐ எதிர்த்து அவர் வாக்களித்தார். இருந்தும் இரட்டைப் பிரஜாவுரிமை பெற்றவர்கள் தேர்தல்களில் போட்டியிட முடியும் என்ற திருத்தச்சட்டத்திற்கு மாத்திரம் தனது ஆதரவை வழங்கியுள்ளார்.

அரசியலமைப்பின் 20ஆவது திருத்தச்சட்டத்தில், இரட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர் ஜனாதிபதி மற்றும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட முடியும் என குறித்த பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு வாக்கெடுப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என எதிர்க்கட்சியினர் வேண்டுகோள்விடுத்தனர். இதன்போது, 64 பேர் எதிராகவும்157 பேர் ஆதரவாகவும் வாக்களித்து குறித்த சட்டமூலம் பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இரட்டை பிரஜாவுரிமை விதிக்கு ஆதரவாக வாக்களித்ததைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், " நான் எதிர்காலத்தில் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவை நாடாளுமன்றத்தில் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக, அமைச்சராக பார்ப்பதில் அக மகிழ்ச்சியடைகிறேன்".

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ நாடாளுமன்றத்திற்கு வருவதானது முஸ்லிம் சமூகத்திற்கும் பிற சிறுபான்மை சமூகங்களுக்கும் ஒருபொழுதும் எந்தவித தீங்கும் விளைவிக்காது என நான் திடமாக நம்பியதால் 20 ம் திருத்தத்தில் இருந்த இரட்டை பிரஜாவுரிமை பிரிவிற்கு தனது தனிப்பட்ட ஆதரவினை தெரிவித்திருந்தேன். எனத் தெரிவித்துள்ளார்.

அமைச்சர்களான உதய கம்மன்பில எம்.பி., விமல் வீரவன்ச எம்.பி. மற்றும் அரசாங்கத்தின் சில எம்.பி.க்கள் பாராளுமன்றத்திற்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவதை எதிர்த்தனர் என்பது நாமறிந்த உண்மை. ஏன்எனில் இரட்டை பிரஜாவுரிமையுள்ள முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்திற்கு வந்தால் இனவாத மற்றும் மதவாதிகளுக்கும்
முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ ஒருபொழுதும் ஆதரவாக செயற்படமாட்டார் என்பதனால் அவர்கள் அதனை எதிர்த்தனர்.

இனவாதம் மற்றும் மதவாதத்ததை மட்டுமே வைத்து அரசியல் செய்யும் இந்த இனவாத அரசியல் வாதிகளுக்கு முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷவின் பாராளுமன்ற பிரவேசம் ஒரு விசமாகவே இருக்கும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை. 20 வது திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை குடியுரிமை என்ற பிரிவை அவர்கள் எதிர்த்ததற்கான காரணம் அதுவேயகும். 

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தனது தொலைநோக்குள்ள தலைமைத்துவ குணங்களால் முஸ்லிம் சமூகத்தால் இன்னும் நேசிக்கப்படுகிற ஒருவராக காணப்படுகின்றார். பாராளுமன்றத்தில் அவர் இருப்பது நிச்சயமாக சமூகங்களிடையே குறிப்பாக சிறுபான்மை சமூகங்கள் பெரும்பான்மை சமூகத்துடன் நல்லிணக்கம், சமாதானம், ஒற்றுமை மற்றும் பரஸ்பர புரிந்துணர்வை வளர்ப்பதற்கான வலுவான பாதையை வகுக்கும் என்று நான் நம்புகிறேன். முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ மனிதநேயமுள்ள ஒரு மனிதர். 2010-2015 ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆட்சியின் போது அவரது மனித நேயம் இனவாதமற்ற தன்மை என்பனவற்றை அவர் பல நாட்டுக்கு நன்மை பயக்கக்கூடிய திட்டங்களால் அவற்றை நிரூபித்திருந்தார்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ 20 ஆவது திருத்தம் மூலம் நாடளுமன்றத்திற்கு வரப்போவதனை உணர்ந்த அமைச்சர்களான உதய கம்மன்பில எம்.பி., விமல் வீரவன்ச எம்.பி. ஆகியோர் அவரின் வருகையை மிகக் கடுமையாக எதிர்த்தனர். ஆனால் அதிமேதகு ஜனாதிபதி கோதபாய ராஜபக்‌ஷ 2021 ல் கொண்டு வரப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் இந்த விதி (இரட்டை பிரஜாவுரிமை) சேர்க்கப்பட மாட்டாது என்று ஜனாதிபதி அவர்களை திருபதிப்படுத்த அளித்த வாக்குறுதியின் பின்னர் அவர்கள் இன்று (2020.10.22) இந்த பிரிவுக்கு வாக்களிக்க முடிவு செய்தனர். புதிய அரசியலமைப்பு 2021 இல் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

இனவாத மற்றும் மதவாதத்தினை மூலதனமாகக் கொண்டு அரசியல் செய்யும் இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், அந்த விதிமுறையை (இரட்டை குடியுரிமை விதி) உண்மையிலேயே எதிர்த்தனர், ஆனால் இறுதியாக அவர்கள் அதை எதிர்க்க எந்த வழியையும் இல்லாமல் அதற்கு ஆதரவு வழங்க வேண்டியிருந்தது.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்திற்கு ஒரு எம்.பி. அல்லது அமைச்சராக வருகிறார் என்பது மிகவும் வரவேற்கத்தக்கது, இந்த அரசாங்கத்தை தனது யுக்தியைப்பயன்படுத்தி கொண்டு வந்தவர் அவர் என்பதால் அவரின் வருகைக்கு பின்னர் பாராளுமன்றம் சுமூகமாக நகர முடியும் என நான் நம்புகிறேன்.

முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்‌ஷ, விமல் வீரவன்ச எம்.பி. மற்றும் உதய கம்மன்பில எம்.பி. போல் இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதியொருவர் அல்ல. முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ அவர்களின் சிந்தனையில் தான் வடக்கின் வசந்தம் மற்றும் கிழக்கின் உதயம் என்பன உருவாக்கப்பட்டன. இந்த இரண்டு திட்டங்களாலும் இவ் இரண்டு மாகாணங்களும் பல்துறை அபிவிருத்தி கண்டமை இங்கு குறிப்பிடத்தக்கது.

எனவே முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ பாராளுமன்றத்திற்கு வருவதை தடுக்கும் நோக்கில் எதிர்ப்பு வெளியிடப்பட்ட அந்த பிரிவிற்கு இனவாத மற்றும் மதவாத அரசியல்வாதிகளுக்கு ஒரு சாட்டையடியாகவும் இன நல்லிணகலகத்தினை வலுவூட்ட பாராளுமன்றத்தினுள் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ வருவது மிகவும் அவசியமாகும் என்பதனை உணர்ந்த்தன் அடிப்படையில் தான் நான் 20 ம் திருத்தத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த இரட்டை பிரஜாவுரிமை உடைய இலங்கைப் பிரஜை பாராளுமன்றத்திற்கு வர வழிசெய்யும் திருத்தத்திற்கு ஆதரவு வழங்கினேன், என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :