ஜின்னாஹ் புலமைப்பரிசில் திட்டம் 2020அஷ்ரப் ஏ சமத்-
பாக்கிஸ்தான் உயர் ஸ்தானிகர் ஆலயத்தினால் வருடா வருடம் இலங்கையில் உள்ள உயா் கல்வி பயிலும் மற்றும் இம்முறை பல்கலைக்கழகம் செல்ல உள்ள வறிய மாணவ மாணவிகளுக்காக ஜின்னாஹ் புலமைப்பரிசில் 2020 திட்டம் இவ் ஆண்டும் இலங்கையில் இருந்து பல பாகங்களிலும் தெரிவு செய்யப்பட்ட 354 மாணவா்களுக்கு 02.10.2020 பி.ஜ.எம்.சி.எச் ல் வைத்து வழங்கப்பட்டது. ஒவ்வொரு மாணவருக்கும் இவ் ஆண்டுக்கான புலமைப்பரிசில் தொகையாக தலா 50 ஆயிரம் ருபாவும் ஜின்னா சான்றிதழும் வழங்கப்பட்டது.

இந் நிகழ்வுகள் பாக்கிஸ்த்தான் உயா்ஸ்தானிகா் மேஜர் ஜெனரல் மொஹமட் சடாட் ஹகட்டக் அவா்கள் தலைமையில் நடைபெற்றது. பிரதம அதிதியாக விளையாட்டுத்துறை மற்றும் இளைஞா் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச கலந்து கொண்டு ஒரு தொகுதி மாணவா்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தாா். அத்துடன் கல்வி இராஜாங்க அமைச்சா் சுசில் பிரேம் ஜயந்தவும் கௌரவ அதிதியாகக் கலந்து சிறப்பித்தாா். இந் நிகழ்வில் இலங்கை மாணவா்களுக்கு இப் பாரிய தொகையை ஜின்னாஹ் புலமைப்பரிசில் வழங்குவதனையிட்டு பாக்கிஸ்தான் நாட்டுக்கும் அந்த அரசுக்கும் அமைச்சா் நாமல் நன்றியை தெரிவித்துக்கொண்டாா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :