சர்வதேச சிறுவர் தின நிகழ்வு இன்று (02) காலை சம்மாந்துறை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் பாடசாலையின் அதிபர் ஏ.அப்துல் றஹீம் அவர்களின் தலைமையில் இடம் பெற்றது
சிறுவர்களின் உரிமைகளை வலியுறுத்தி "எங்கள் நாடு எங்கள் கையில்"என்ற கருப்பொருளில் ஆசிரியர்கள்,மாணவர்கள் இணைந்து பாடசாலை எல்லைக்குட்பட்ட வீதிகளில் பதாகைகளுடன் ஊர்வலமாக சென்றனர்.
இரண்டாம் கட்டமாக மேடை நிகழ்வு ஆரம்பமானது இதில் மாணவர்களது நிகழ்வுகளும்,போதையும் பேரழிவும் என்ற மாணவர்களது நாடகமும,சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் தலைவர் யூ.எல். மஃறூப் மதனி அவர்களின் போதையும் இளைஞர்களும் என்ற உரையும் இடம்பெற்றது.
மாணவர்கள் அனைவருக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
இன் நிகழ்வில் பாடசலை ஆசிரியர்கள்,பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment