பொத்துவில் ஆதார வைத்தியசாலையை அனைத்து வகையிலும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டம்-PD ஏ.லதாகரன்

ஏ.எல்.றியாஸ்-


லக நோயாளர் பாதுகாப்பு தினத்தினையொட்டி பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த மாகாண பணிப்பாளர்

குறைந்த வளங்களைக்கொண்டு கூடிய சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கும் பொத்துவில் ஆதார வைத்தியசாலையை அனைத்து வகையிலும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளதாக கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஏ.லதாகரன் தெரிவித்தார்.

உலக நோயாளர் பாதுகாப்பு தினத்தினையொட்டி ”பாதுகாப்பான சுகாதார ஊழியர்கள், பாதுகாப்பான நோயாளர்கள்” எனும் தொனிப்பொருளில் பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் நேற்று (17) பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் மேற்கன்டவாறு தெரிவித்தார்.

பொத்துவில் ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

பொத்துவில் ஆதார வைத்தியசாலையானது, ஒப்பீட்டளவில் மிகவும் குறைந்த வளங்களைக்கொண்டு, கூடிய சேவைகளை வழங்குகின்ற ஒரு வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் இவ்வைத்தியசாலையை பல வழிகளிலும் அபிவிருத்தி செய்வதற்கு திட்டமிட்டுள்ளோம்.

கல்முனை பிராந்தியத்தில் உள்ள பொத்துவில் ஆதார வைத்தியசாலையானது, விசேடமாக கவனிக்கப்படவேண்டிய ஒரு வைத்தியசாலையாகும். அதற்குக் தூரம், மனிதவளப் பற்றாக்குறையே பிரதான காரணங்களாகும். இவ்வனைத்தினையும் கொண்டுள்ள இவ்வைத்தியசாலையானது, அவற்றை எல்லாம் மாற்றியமைத்து, சிறந்த சேவைகளை வழங்கிக்கொண்டிருக்கிறது. அதற்காக வைத்திய அத்தியட்சகர், வைத்தியர்கள் உள்ளிட்ட அத்தனை ஊழியர்களுக்கும் பாராட்டுக்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

குறிப்பாக, பொத்துவில் பிரதேசமானது சுற்றுலாத்துறைக்கு பேர்போன ஒரு இடமாகக் காணப்படுகிறது. உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் என பலர் இங்கு வந்துசெல்வது வழக்கமாகும். சுற்றுலாப்பயணிகளும் தங்களது சுகாதார தேவைகளை பெற்றுக்கொள்வதற்காக, இவ்வைத்தியசாலையை நாடிவருகின்றனர். எனவே எமது சேவைகள் மேலும் தரமானதாக வழங்கப்படுகின்ற பட்சத்தில் இந்த வைத்தியசாலை எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்து தேசியத்திலும், சர்வதேசத்திலும் சிறந்துவிளங்கும் என்றார்.

குறித்த நிகழ்வின் போது பொத்துவில் ஆதார வைத்தியசாலையில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வைத்தியர்களுக்கான விடுதிக் கட்டிடத்தினையும் மாகாணப் பணிப்பாளர் திறந்து வைத்தார். அத்துடன், வைத்தியசாலைக்கு ஒரு தொகுதி அலுவலக தளபாடங்களையும் அவர் கையளித்தார்.

அதனைத்தொடர்ந்து வைத்தியசாலையின் தேவைகள் அடங்கிய மகஜர் ஒன்றும் கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது. இதேவேளை குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட அதிதிகளுக்கு நினைவுச்சின்னங்களும் வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நினைவுச்சின்னங்களை வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஐ.எல்.எம்.றிபாஸ், தரமுகாமைத்துவப் பிரிவு பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம்.எம்.இஸ்ஸடீன், மற்றும் பதில் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் எம்.எம்.சமீம் ஆகியோர் வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஜி.சுகுணன், பிரதிப்பணிப்பாளர் டொக்டர் ரீ.எஸ்.ஆர்.ரீ.ஆர்.றஜாப் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், விசேட வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :