இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் அரசியல் விழிப்புணர்வை ஏற்படுத்தி, தேசிய தலைவராக மனங்களில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் மர்ஹூம் எம்.எச்.எம்.
அஸ்ரப், கோர விபத்தில் சிக்கி, உயிரிழந்து 20 ஆண்டுகள் கடந்து விட்டன.
அஷ்ரப் ஒரு அரசியல் தலைவராக எம்மால் அறியப்பட்டாலும் அவர் ஒரு சமூகப் போராளி, தனது இளவயது, குடும்பம், சமூக வாழ்க்கை பொருளாதாரம் என்பவற்றை சமூகத்திற்காக அர்ப்பணித்த ஒரு மாபெரும் தலைவனாக இருந்தார்.
அஷ்ரப்பின் அகால மரணத்தின் பின்னர் அவரை நம்பி இருந்த சமூகமும், அவரது ஆர்வலர்களும் அனாதை ஆக்கப்பட்டு உள்ளனர் என்றே கூறலாம், அத்துடன் அவரது கனவுகள் இன்றும் திட்டமிட்டுப் புறக்கணிக்கப்படுவதுடன், 'தேர்தல்கால தெய்வமாக 'மட்டுமே அவர் பாவிக்கப்படுகின்றார்,
அந்த வகையில் அஷ்ரப் உயிரோடு இருக்கும் வேளையில் எவற்றை எல்லாம் விரும்பி கனவு கண்டாரோ, அக்கனவுகள் அவருக்குப் பின் வந்த அரசியல்வாதிகளால் புறக்கணிக்கப்பட்டே வந்திருக்கின்றன என்பது தெளிவான உண்மை.
அஸ்ரப், தனது அரசியலில் இருந்து ஓய்வு பெற்று தான் விரும்பிய மக்களுடன் வாழ்ந்து மரணிக்க வேண்டும் என எண்ணி தனக்கான ஒரு 'மக்கள் சந்திப்புமனை' ஒன்றை ஒலுவிலில் கட்டி இருந்தார்.
தனது கனவுகளான தென்கிழக்குப் பல்கலைக் கழகம், ஒலுவில் துறைமுகம் போன்றவற்றை அமைத்த ஊரிலேயே தான் ஓய்வுகாலத்தை கழிக்க வேண்டும் என எண்ணி இருந்தார்.
ஆனால் அந்த இடம் இன்றும் பாழடைந்து, பற்றைக் காடாகவே காட்சி தருகின்றது, இதனை மறைந்த தலைவரது ஆவணங்கள், வரலாறுகளை உள்ளடக்கிய ஒரு நினைவு காட்சி கூடமாக அமைத்திருக்க முடியும் அல்லவா?
இவ்வாறு அஷ்ரபின் எத்தனையோ கனவுகள் கட்டாயக் கருக்கலைப்புச் செய்யப்பட்டுள்ளன, அந்த வகையில் தன்னை, தன் பொருளாதாரத்தை, குடும்பத்தை தியாகம் செய்த ஒரு தலைவனை அவரது இறப்பு நாளில் மட்டும் கடமைக்காக நினைவு கூறுவதை விட்டு விட்டுங்கள்.
அவரது கட்சியால், கொள்கைகளால், தியாகத்தினால் தங்களை வளர்த்துக் கொண்டிருப்பவர்களும், ஏனைய அரசியல்வாதிகளும், அஷ்ரபின் கனவுகளை நடைமுறைப்படுத்துவதே, அவருக்கு செய்யும் கைமாறாக அமையும்.
0 comments :
Post a Comment