என்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமியுங்கள் - முன்னாள் அமைச்சர் டிலான் பெரேரா


M.I.இர்ஷாத்-


குரங்குகளால் விவசாயம் மற்றும் பயிர்வளர்ப்புக்கு இருக்கின்ற பாதிப்புக்களை தவிர்க்க வேண்டுமாயின், தன்னை குரங்குகளுக்கான அமைச்சராக நியமித்தால் மந்தி மற்றும் குரங்குகளின் தொல்லைகளை தீர்ப்பேன், என பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா கூறுகிறார்.

அதற்காக என்னை குரங்கு அமைச்சர் என்று அழைத்தாலும் நான் வருத்தப்பட போவதில்லை, என்று பதுளையில் நடைப்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது இதனை கூறினார்.

குறிப்பாக மந்திகள் , குரங்குகள் உற்பட அந்த இனத்தால் பல்வேறு சிக்கல்களை விவசாயிகள் எதிர்நோக்கி வருகிறார்கள். எமது விவாசய உற்பத்திகளில் 60 வீதத்தை இந்த குரங்களும் மந்திகளும் அழிக்கின்றன.

தற்போது இந்த குரங்களும் மந்திகளும் கொழும்பை அண்டிய பகுதிகளுக்கும் வந்து விட்டது. இப்படியே போனால் பாரளுமன்றமும் வந்துவிடும் .

இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் இதற்காக நான் ” மந்தி” விவகார அமைச்சராக பதவியேற்கவும் தயார் என்று சொன்னார்.

இதற்கு முன்னர் முன்னாள் ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன அவர்களும் இந்த குரங்களின் வளர்ச்சி வீதம் அதிகரித்து இருப்பதாகவும், இதனை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டார்.

இந்த விடயம் நகர்புற மக்களுக்கு சிரிப்பாக இருந்தாலும் விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கவனத்தில் கொண்டு அரசாங்கம் உடனடியாக தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

குரங்குகள் அதிகமாக உலர் வலய பிரதேசங்களில் கூட்டமாக வாழுகின்றது.சுமார் 50 வருட காலமாக பொலநறுவை மாவட்ட விவாசாயிகள் , பொதுமக்கள் குரங்கு தொல்லைக்கு ஆளாகி இருக்கின்றனர்.

தற்போது பதுளை மாவட்ட விவசாயிகளில், இந்த பிரச்சினையை அதிகளவு எதிர்நோக்குவது ஏழை விவசாயிகளே என்பது குறிப்பிடதக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :