மும்மொழியிலும் நாடாளுமன்றத்தில் முழங்கிய இரா.சாணக்கியனுக்கு உயர் பதவி!

மிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட இளம் நாடாளுமன்ற
உறுப்பினர் இரா. சாணக்கியனுக்கு உயரிய பதவி வழங்கப்பட்டுள்ளது.

இதற்கமைய அவருக்கு சபாநாயகர் குழுவில் அங்கத்துவம் வழங்கப்பட்டுள்ளது.

அதாவது பிரதி சபாநாயகர் அல்லது குழுக்களின் தலைவர் அமர்வில் பிரசன்னமாகாத

சந்தர்ப்பத்தில் அவையை கொண்டு நடத்தும் பொறுப்பு இரா.சாணக்கியனுக்கு வழங்கப்பட்டுள்ளது.

தனது நாடாளுமன்ற கன்னி உரையில் நாடாளுமன்றத்தில் மும்மொழியிலும் உரையாற்றிய
இரா.சாணக்கியன் பலரது கவனத்தினையும் ஈர்த்திருந்தார்.

குறிப்பாக தமிழ் மக்களின் பிரச்சனைகள் குறித்து நாடாளுமன்றத்தில் சிங்கள
நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்கு கொண்டு சென்ற இரா.சாாணக்கியனுக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வந்தனர்.

சமூக வலைத்தளங்களிலும் அவரது கன்னியுரை வைரலாகியிருந்த நிலையில்,
நாடாளுமன்றத்தில் தற்போது அவருக்கு வழங்கப்பட்டுள்ள குறித்த உயர் பதவியானது அவருடைய மும்மொழி திறமைக்கும் ஆளுமைக்கும் கிடைத்த அங்கீகாரமாக பார்க்கப்படுகின்றது.

இதேவேளை, இரா.சாணக்கியன் இன்று இடம்பெற்ற நாடாளுமன்ற அமர்வின் போது சிறிது நேரம் நாடாளுமன்ற அமர்வுகளுக்கு தலைமை தாங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :