எச்.எம்.எம்.பர்ஸான்-
ஜம்இய்யதுத் தஃவதில் இஸ்லாமியா - கல்குடாவின் சமூக சேவைப் பிரிவான தஃவா சமூக நலன்புரிச் சங்கம் (DSWA ) மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாம் ஒன்றினை நடாத்த ஏற்பாடு செய்துள்ளது.
குறித்த நிறுவனம் வருடாந்தம் நடாத்தி வரும் 07வது இரத்ததான முகாம் எதிர்வரும் 2020.09.12ம் திகதி சனிக்கிழமை காலை 09 மணி முதல் 01 மணி வரை மீராவோடை எம்.பீ.சீ.எஸ் வீதியில் அமைந்துள்ள தாருஸ்ஸலாம் பள்ளிவாயலில் நடைபெறவுள்ளது.
உயிர் காக்கும் இவ் உண்ணத தர்மத்தில் பங்கு கொண்டு மனித நேய, சமூக நல்லிணக்கப் பணியின் பங்காளிகளாக அனைத்து சகோதர, சகோதரிகளும் கலந்து கொண்டு இரத்த தானம் வழங்குமாறு ஏற்பாட்டுக் குழுவினர் கேட்டுக் கொண்டுள்ளனர்.
0 comments :
Post a Comment