களுத்துறையில் மற்றுமொரு பிரதேசத்தில் அச்சுறுத்தல்-மக்களுக்கு நடமாட தடை...


J.f.காமிலா பேம்-


ளுத்துறை – ஹொரண மில்லனிய பிரதேசத்தில் அண்மையில் மக்களை அச்சுறுத்திவந்த நரிக்கூட்டம், தற்போது அங்கிருந்து சில கிலோமீட்டர் தூரத்திலுள்ள ஓவிட்டியாகம பிரதேசத்தில் நுழைந்திருக்கின்றன.

இதன் காரணமாக அந்த பிரதேசத்திலுள்ள மக்களும் அச்சத்தில் உறைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மாதத்தில் ஹொரண மில்லனிய பிரதேசத்தில் பைத்தியம் பிடித்த நரிகள் கடித்ததில் இருவர் பலியாகியிருந்ததுடன், பலர் காயமடைந்திருந்தனர்.

இந்த நிலையில், ஓவிட்டியாகம பிரதேசத்திலும் அப்படியான விசர் நரிக்கூட்டம் நடமாடி வருகின்றன என்று பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள ஒருவரை நேற்று முன்தினம் இரவு நரியொன்று வீடு புகுந்து கடிக்க முயுற்சித்துள்ளது,

இதன்போது தடியொன்றில் அந்த நபர் தாக்கியதில் நரி இறந்துள்ளது.

அடுத்தநாள் வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் சம்பவ இடத்திற்குச் சென்று , இறந்த நரியின் தலையை பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அந்த நரி விசர்பிடித்திருப்பது உறுதிசெய்யப்பட்டது.

இதன் காரணமாக குறித்த பிரதேசத்தில் மக்கள் இரவில் நடமாடுவதை தவிர்த்துக் கொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.இப்பிரதேசங்களுக்கு பயணிப்பவர்கள் மிக அவதானத்₹துடன் தவிர்த்துக்கொள்வது சிறந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :