எஸ்.பி.பாலசுப்பிரமணியம் உடல்நிலை மிகவும் கவலைக்கிடம்..

கொ
ரோனா தொற்று காரணமாக கடந்த மாதம் 5 ஆம் திகதி சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில், பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அனுமதிக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து 14 ஆம் திகதி அவரது உடல்நிலை மோசமடைந்ததால் தீவிர சிகிச்சை பிரிவிற்கு மாற்றப்பட்டு வெண்டிலேட்டர், எக்மோ கருவிகளுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

செப்டம்பர் மாதத்தின் முதல் வாரத்திலிருந்தே எஸ்.பி.பி.யின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வந்ததாக அவரது மகன் எஸ்.பி.பி.சரண் மற்றும் வைத்தியசாலை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மேலும் எஸ்.பி.பி.யின் உடல்நிலை சிகிச்சைக்கு ஒத்துழைத்து வருவதாகவும், பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், வைத்தியர்கள் உதவியுடன் 15 முதல் 20 நிமிடங்கள் வரை அவர் எழுந்து அமர்ந்திருந்ததாகவும் கடந்த செப்டம்பர் 14 ஆம் திகதி எஸ்.பி.பி.சரண் தெரிவித்திருந்தார்.

அதைத்தொடர்ந்து அவர் விரைவில் நலம் பெற்று வீடு திரும்ப உள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இன்று (24) எம்ஜிஎம் ஹெல்த்கேர் வைத்தியசாலை எஸ்.பி.பி.உடல்நிலை குறித்து விடுத்திருக்கும் அறிக்கையில், கடந்த 24 மணி நேரமாக அவரது உடல்நிலை மோசமடைந்து வருவதாகவும், மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாகவும், வைத்தியர்கள் அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக எஸ்.பி.பி.உடல்நலம் பெற்று மீண்டு வர வேண்டும் என்று ஏராளமான ரசிகர்களும், திரைத்துறையினரும் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :