கல்முனை பாண்டிருப்பில் விபத்து மூவர் படுகாயம்-போக்குவரத்து நெரிசல்


பாறுக் ஷிஹான்-


நேருக்கு நேர் சிறிய ரக டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதிக்கொண்டதில் மூவர் படுகாயமடைந்த நிலையில் கல்முனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாண்டிருப்பு பிரதான வீதியில் இரவு இவ்விபத்து ஏற்பட்டது.

மேலும் இவ்விபத்தானது கல்முனை மட்டக்களப்பு பிரதான வீதியில் பயணித்த மோட்டர் சைக்கிள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டி நேருக்கு நேராக மோதுண்டதுடன் கொள்கலன் வண்டி ஒன்றினை முந்திச்செல்லும் முயற்சியினால் இவ்விபத்து இடம்பெற்றதாக நேரில் கண்டவர்கள் குறிப்பிட்டனர்.

இவ் விபத்தில் படுகாயமடைந்த மோட்டர் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்கள் மற்றும் சிறிய ரக டிப்பர் வண்டியின் சாரதி படுகாயமடைந்த நிலையில் கல்முனை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் விபத்தின் போது மோட்டர் சைக்கிளின் முன் சில்லு உடைந்து விழுந்துள்ளதுடன் பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :