350/- ரூபா விலையில் காய்கறிகளின் நிவாரணப் பொதி! அரசாங்கத்தின் திட்டம்!


ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


தெரிவு செய்யப்பட்ட பொது இடங்களில் 350/- ரூபா என்ற சலுகை விலையில் காய்கறிகளின் நிவாரணப் பொதியை நுகர்வோருக்கு விநியோகிக்க அரசாங்கம் முடிவு செய்துள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.

காய்கறிகளின் பொதிகளில் கரட், உள்ளூர் உருளைக்கிழங்கு, பீட், தக்காளி, லீக்ஸ் மற்றும் நோ-கோல் என 6 வகையான காய்கறிகள் அடங்கியிருக்கும்.

இந்த காய்கறிகளின் சந்தை விலை 700/- ரூபாவாக இருப்பினும், ஜனாதிபதியின் தேசிய கொள்கை கட்டமைப்பின் கீழ் இதனை 350/- ரூபா என்ற சலுகை விலையில் விநியோகிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த விநியோகத்தை தேசிய உணவு மேம்பாட்டு அதிகாரசபை, விவசாய மேம்பாட்டு நிலையங்கள் மூலம் மேற்கொள்கிறது,

விவசாயிகளிடமிருந்து எந்தவொரு இடைத்தரகர்களும் இல்லாமல் கொள்வனவு செய்யப்பட்ட மரக்கறிகளே நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படவுள்ளன.

இந்த மரக்கறி நிவாரணப்பொதி திட்டம் புறக்கோட்டை, மருதானை தொடரூந்து நிலையங்கள், இசுருபயா, சௌசரிபாய, செத்சிறிபாய மற்றும் நுகேகொட ஆகிய இடங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரணப்பொதிகள் கண்டியில் ஹடபிம அதிகாரசபையின் பங்களிப்புடன் மூன்று இடங்களில் கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :