மத்திய கிழக்கில் இருந்து நாடு திரும்பிய இலங்கையர்கள்



J.f.காமிலா பேகம்-
த்திய கிழக்கின் இரு நாடுகளில் இருந்து 472 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்.
தொழில் நிமித்தம் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திற்கு சென்றிருந்த 405 இலங்கையர்கள் டுபாயில் இருந்து எமிரேட்ஸ் விமன சேவைக்குச் சொந்தமான E.K-648 எனும் விமானம் மூலம் இன்று அதிகாலை 2.02 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.

இதேபோன்று, கட்டாரின் தோஹா நகரில் இருந்து கட்டார் விமான சேவைக்குச் சொந்தமான Q.R – 668 எனும் விமானம் ஊடாக 67 இலங்கையர்கள் இன்று அதிகாலை 1.45 அளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இவ்வாறு கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்துள்ள அனைவரும் பி.சி.ஆர்.பரிசோதனைக்குப் பின்னர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :