நாட்டில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் காரணமாக பல மாவட்டங்கள் பாதிப்படைந்துள்ளதுடன் கொழும்பின் பல பிரதேசங்களும் வெள்ளதில் மூழ்கியுள்ளன.
பொருளாதார நகரம் என்றபோதிலும் , வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் மக்கள் தொகையானது கொழும்பில் கணிசமான அளவு அதிகமாகவே காணப்படுகிறது.
இரண்டு நாட்களாக பெய்து வரும் அடைமழையினால் ஏற்பட்டுள்ள வெள்ளம் காரணமாக கொழும்பிலுள்ள பல குடும்பங்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றன.
கலாநிதி.வி.ஜனகன் கொரோனா காலத்தில் கூட இம்மக்களுக்காக பல பாரிய சேவைகளை செய்தவர். அந்தவகையில் தற்போது வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கொழும்பு வாழ் மக்களுக்காக “சுத்தமான கொழும்பு” திட்டத்தின் கீழ் பல நிவாரண திட்டங்களை தற்போது செயற்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் நேற்று நவகம்புர, தமிழ்நாடு, தெமட்டகொட, ஆகிய பகுதிகளுக்கு உலர் உணவுப் பொதிகள் மற்றம் சமைத்த உணவுகள் என தன்னாலான அனைத்து சேவைகளை அவர் தொடர்ந்தும் செய்து வருகின்றார்.
இன்று தமிழ்நாடு பகுதியில் வசிக்கும் பல குடும்பங்களுக்கு தேவையான உணவுப் பொதிகளும், சமைத்த உணவுகளும் வழங்கப்பட்டன.
முதியவர்கள், சிறுவர்கள் என பலரும் அல்லல்படும் இத்தருணத்தில் இந்த நிவாரணத் திட்டங்கள் மிகுந்த ஆறுதல் அளிப்பதாகவும் இதற்காக பாரிய சிரமங்களுக்கு மத்தியில் தனது சேவைகளை செய்து கொண்டிருக்கும் கலாநிதி வி. ஜனகனுக்கு நன்றிகளைத் தெரிவிப்பதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
“சுத்தமான கொழும்பு” திட்டத்தின் ஊடான நிவாரணங்ளை தொடர்ந்தும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குமாறு கலாநிதி.வி.ஜனகன் தனது இணைப்பாளர்களை பணித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment